விரைவில் வருகிறது Ola-வின் Electric Scooter: இனி குறுகிய தெருக்களும் Ola வசம்

Wed, 09 Dec 2020-7:16 pm,

நியூசிலாந்தில் முதலில் தனது மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தப்போவதாக ஓலா புதன்கிழமை தெரிவித்தது. 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 64,000 புதிய மின்சார வாகனங்களை சாலையில் செலுத்தும் இலக்கை அடைய இது நியூசிலாந்து அரசாங்கத்திற்கு உதவும் என்றும், அதே நேரத்தில் இதன் மூலம் மாசுபாடு குறையும் என்றும் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்த 6 முதல் 9 மாதங்களில் நியூசிலாந்தில் ஓலாவின் புதிய மின்சார இருசக்கர வாகனங்கள் முழுமையாக இயங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் சாலையில் காணப்படும். ஓலாவின் முதல் மின்சார ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில், அதாவது ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து பல்வேறு யூகங்கள் எழுப்பப்படுகின்றன.

ஓலாவின் உற்பத்தி ஆலைகள் இந்தியாவில் அமைக்கப்படும். மேலும் மேட் இன் இந்தியா மின்சார ஸ்கூட்டர்கள் மக்களின் ஆதரவைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் வரை இயக்க முடியும் என்று ஓலா கூறுகிறது.

இந்தியாவில் வண்டி சேவையை வழங்கும் முதன்மை நிறுவனமான ஓலா, மின்சார நான்கு சக்கர வாகனத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. முன்னதாக, ஓலா இந்தியாவில் ஒரு லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்வரும் நாட்களில் அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்தது. இதனால் இந்தியர்கள் மலிவான வாகனங்கள் மற்றும் மலிவான வாகனங்களை மின்சார இயக்கத்துடன் பெற முடியும்.

ALSO READ: இனி பெட்ரோலே வாங்க வெண்டாம்: டிசம்பரில் வருகிறது இந்த அற்புதமான electric scooter!!

இந்தியாவில் மின்சார 4 சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்த ஓலா திட்டமிட்டுள்ளது. இதனால் அதன் சந்தை மேலும் விரிவடையும். மேலும், வரும் நாட்களில் மின்சார கார்கள் மூலம் சிறிய நகரங்களை அடைவதற்கான திட்டங்களில் ஓலா செயல்பட்டு வருகிறது. ஓலாவின் மின்சார நான்கு சக்கர வாகனம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், பஜாஜின் வரவிருக்கும் நான்கு சக்கர வாகனமான Bajaj Qute electric, மஹிந்திராவின் Mahindra Atom electric மற்றும் டாடா மற்றும் டிவிஎஸ்-சின் நான்கு சக்கர வாகனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link