சரஸ்வதியின் ரூபமான அன்னை சாரதாவின் புராதன சாரதா பீடத்தின் புகைப்படங்கள்
வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கிய சாரதா பீடத்தில் அமைந்திருந்த ஆலயத்தை பதினான்காம் நூற்றாண்டில் முகலாய ஆட்சியாளர்கள் சிதைத்துவிட்டனர். தற்போது சிதிலமடைந்து காணப்படும் கோவிலின் எச்சங்களை பார்ப்பதற்கு முன்னதாக எங்கும் நிறைந்திருக்கும் பராசக்தியை தரிசித்துச் செல்வோம்...
இந்திய பிரிவினைக்கு முன்னதாக இந்துக்களின் வருகையால் நிரம்பிய இடம் இது...
சாரதா பீடத்தின் தற்கால நிலை இது. ஆனால் ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புனிதத்தலமாக பக்தர்கள் யாத்திரை செய்யும் தளமாக விளங்கியது சாரதா பீடம்
சாரதா பீடத்தின் சரசுவதி கோயிலின் நீளம் 142 அடி, அகலம் 94.6 அடியாக இருந்தது. அதோடு, 88 அடி உயர தோரண வாயில் இருந்தது.
51 சக்தி பீடங்களில் ஒன்று சாரதா பீடம்.
காஷ்மீர பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த சாரதா பீடம் உள்ள பகுதியில் இந்து சமய வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கியது