Chennai உட்பட பல இடங்களிலிருந்து ‘Statue of Unity’-க்கு 8 புதிய ரயில்கள்
டெல்லியில் உள்ள நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து கெவாடியாவுக்கான ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கினார். அதே நேரத்தில், அகமதாபாத் முதல் கெவாடியா வரை நேரடி ரயில் சேவையும் தொடங்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில், இந்த பாதைக்கு மொத்தம் 8 ரயில்கள் தொடங்கப்பட்டன. இதில் சென்னையிலிருந்து ஒருமைப்பாட்டு சிலையை நோக்கி செல்லும் ஒரு புதிய ரயிலும் அடங்கும்.
அகமதாபாத் முதல் கெவாடியா வரை இயங்கும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார். இந்த ரயிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த விஸ்டாடோம் கோஸ்கள் நிறுவப்பட்டுள்ளன. இது உங்கள் பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றும். இந்த ஜன் சதாப்தி ரயிலில் AC chair car Executive Class, AC chair car, மற்றும் Non-AC chair car ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. Vistadome கோச்சுகள் மிகவும் சிறப்பு வாய்ந்த கோச்சுகளாகும். இவற்றில் மேல் பகுதி மற்றும் ஜன்னல்களில் மிகப் பெரிய கண்ணாடிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் திறந்த வெளியில் அமர்ந்திருப்பது போன்ற எண்ணம் பயணிகளுக்குத் தோன்றும். இந்த பெட்டியில் சுற்றுப்புறங்களின் அழகான காட்சிகளைப் பார்ப்பதும் எளிதாக இருக்கும்.
கெவாடியா ரயில் நிலையம் உருவாக்கப்படுவதால், இந்த பகுதியின் வளர்ச்சியும் வேகமாக நடக்கும். இனி, ஒருமைப்பாட்டு சிலையைக் காண நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் குறுகிய காலத்திலும் எளிதாகவும் பயணிக்க முடியும். தற்போது, ஒருமைப்பாட்டு சிலையின் அருகில் வதோதரா, பருச் மற்றும் அங்கலேஷ்வர் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும் சுமார் 70-75 கி.மீ தூரத்தில் உள்ளன.
கெவாடியாவில் நவீன ரயில் நிலையம் கட்டப்படுவதால், இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கெவாடியாவை பிரதான அகல பாதையுடன் இணைக்கவும், 18 கி.மீ நீளமுள்ள தபோய்-சந்தோட் குறுகிய பாதையை அகலமான பாதையாக மாற்றவும், சந்தோடில் இருந்து கெவாடியா வரை 32 கி.மீ நீளமுள்ள புதிய ரயில் பாதை அமைக்கவும் ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் முதல் கட்ட ரயில் நிலைய நவீனமயமாக்கல் மற்றும் மேம்பாட்டுத் திட்ட செயலாக்கம் காந்திநகரில் இருந்து தொடங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் காந்திநகர் ரயில் நிலையம் மிகவும் அழகாக மாற்றப்படும். மேலும், இந்த நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு ஹோட்டல் வளாகத்தில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வசதியும் கிடைக்கும்.