Hot இடங்களில் Cool-லா வீடு வாங்கணுமா? PNB E-Auction-ல் கலந்துக்கோங்க!!
பலர் சொத்து வாங்க வங்கியில் கடன் வாங்குகிறார்கள். வாடிக்கையாளர் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாவிட்டாலோ, அல்லது, பல அறிவிப்புகளுக்குப் பிறகும், வங்கியின் கடனை கட்டாவிட்டாலோ, வங்கி தனது பணத்தை திரும்பப் பெற சொத்தை ஏலம் விடுகிறது. இந்த செயல்முறையின் கீழ் PNB ஒரு மெகா இ ஏலத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது.
மின் ஏல நாளில் ஆன்லைனில் சொத்துகள் ஏலம் விடப்படுகின்றன. ஏலத்தில் உங்கள் ஏலத் தொகை அதிகமாக இருந்தால், அந்த சொத்து உங்களுக்கு ஒதுக்கப்படும். இதற்குப் பிறகு, நீங்கள் 15 நாட்களில் வங்கியில் உள்ள சொத்தின் மதிப்பில் 10 சதவீதத்தை செலுத்த வேண்டும்.
இந்த ஏலத்தில் சொத்து வாங்க முயற்சி செய்ய, ஆன்லைன் e-Bkray போர்ட்டல், https://ibapi.in க்குச் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த இணையதளத்தில், வங்கிகளால் கையக்கப்படுத்தப்பட்ட சொத்துக்களின் மின் விற்பனை செய்யப்படுகிறது. இங்கே நீங்கள் ஏலத்துடன் தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், ஏலத்தின் அளவு, சொத்துக்களின் மதிப்பு மற்றும் அவற்றின் இடம் ஆகியவற்றைக் காணலாம். இவற்றின் விவரங்களை புரிந்து கொள்ளலாம். இந்த மின் ஏலம் நாடு முழுவதும் முற்றிலும் வெளிப்படையான முறையில் செய்யப்படும் என்று PNB கூறியுள்ளது.
மின் ஏலத்திற்கு, ibapi.in போர்டல் முகப்பு பக்கத்தில் உள்ள பதிவு இணைப்பைக் கிளிக் செய்து மின்னஞ்சல் ஐடி மற்றும் பிற தகவல்களைக் கொடுத்து உங்களை பதிவு செய்து கொள்ளலாம். வங்கிகளின் மின் ஏலத்தில் சொத்து வாங்குவது லாபகரமான ஒப்பந்தமாகும். இந்த சொத்துகளில் எந்த ஆபத்தும் இருக்காது. இதில் நீங்கள் மலிவாகவும் வீட்டைப் பெறலாம். வங்கியில் இருந்து வீட்டுக் கடன் பெறுவதும் எளிதாகும்.
வாடிக்கையாளர் தான் வாங்க நினைக்கும் சொத்தை, அது ரியல் எஸ்டேட் சட்டமான RERA இன் வரம்பிற்குள் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், வங்கியின் ஏலச் சொத்தில் எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை.