SBI-ன் இந்த அகௌண்ட் மூலம் வியாபாரம் எளிதாகும்: அற்புதமான அம்சங்கள் உங்களுக்காகவே

Wed, 02 Dec 2020-2:42 pm,

SBI வழங்கும் கர்ண்ட் அகௌண்டில் குறைந்தபட்ச இருப்பு 5000 ரூபாயாக இருக்க வேண்டும். இந்த வகையில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5,00,000 ரூபாய் வரை இந்த கணக்கில் டெபாசிட் செய்யலாம். உங்கள் ஹோம் பிரான்சிலிருந்து பணத்தை எடுப்பதானால், அதற்கும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது 22000-க்கும் அதிகமான கிளைகளில் நடப்பு கணக்கு வசதியை வழங்கி வருகிறது.

SBI வங்கி, நடப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் விரைவான கார்ப்பரேட் இணைய வங்கி வசதியை இலவசமாக வழங்குகிறது. இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி மூலம் இலவச NEFT / RTGS (NEFT / RTGS) செய்ய முடியும். இதற்கு எந்த கட்டணமும் இருக்காது. ஒவ்வொரு மாதமும் 50 மல்டிசிட்டி காசோலைகள் இலவசமாகக் கிடைக்கும்.

 

50 இலவச மல்டிசிட்டி காசோலைகள் தீர்ந்தவுடன், அதே மாதத்தில் மற்றொரு செக் புக் வாங்க, 25 பக்க காசோலை புத்தகத்திற்கு நீங்கள் 25 ரூபாய் + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். 50 பக்க காசோலை புத்தகத்திற்கு 150+ ஜிஎஸ்டி செலுத்தப்பட வேண்டும். ஒரு மாதத்தில் ரூ .5,00,000 க்கும் அதிகமான பணத்தை டெபாசிட் செய்ய, 5 லட்சத்திற்குப் பிறகு, நீங்கள் 1000 ரூபாய்க்கு 0.75 பைசா + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.

ரூ .5000 வரை 25 ரூபாய் (ஜிஎஸ்டி உட்பட) ரூ 5000 முதல் ரூ .10000 வரை ரூ .50 (ஜிஎஸ்டி உட்பட),  ரூ. 10000 முதல் ரூ. 100000 வரை 500 ரூபாய் (ஜிஎஸ்டி உட்பட)

வங்கி கிளையிலிருந்து பரிவர்த்தனை செய்யும்போது, ரூ .10000 வரை-ரூ .2.50 + ஜிஎஸ்டி, ரூ .10,000 முதல் 1 லட்சம் வரை-ரூ .5 + ஜிஎஸ்டி, ரூ .1 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ. 2. லட்சம் வரை ரூ .15 + ஜிஎஸ்டி, ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை – ரூ.25 + ஜிஎஸ்டி, ரூ.5 லட்சத்துக்கு மேல்-ரூ.50+ ஜிஎஸ்டி. நீங்கள் இணைய வங்கி அல்லது மொபைல் வங்கி மூலம் NEFT பரிவர்த்தனைகளை செய்தால், கட்டணம் ஏதும் இல்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link