“BrahMos”–400 கி.மீ அப்பால் உள்ள எதிரியையும் தாக்கும் இந்த இந்தியாவின் பிரம்மாஸ்திரம்!!

Thu, 01 Oct 2020-3:46 pm,

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையின் தாக்கும் வரம்பு 400 கி.மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பின் சோதனையும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. (All Images – DRDO)

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO-வின் PJ-10 திட்டத்தின் கீழ் பிரம்மோஸ் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், ஏவுகணை, உள்நாட்டு பூஸ்டர்களுடன் ஏவப்பட்டது. இந்த பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை 400 கி.மீ.-ஐ விட அதிக தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது.

இந்தியாவின் ஆயத்த ஆயுதங்களில் பிரம்மோஸ் ஏவுகணையும் அடங்கும். இது வான்வழித் தாக்குதலுக்கும், வானிலிருந்து மண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை நீர்மூழ்கி கப்பல், நீர் கப்பல், விமானம் அல்லது நிலத்திலிருந்து கூட செலுத்த முடியும்.

ரஷ்யாவின் NPO Mashinostroeyenia மற்றும் இந்தியாவின் DRDO ஆகியவை இணைந்து இதை உருவாக்கியுள்ளன. இது ரஷ்யாவின் பி -800 ஓன்கிஸ் கப்பல் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியாவின் பிரம்மபுத்ரா மற்றும் ரஷ்யாவின் முஸ்க்வா நதிகளின் பெயர்களை இணைத்து பிரம்மோஸ் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரஷ்யா ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது. பறக்கும் போது வழிகாட்டும் திறனை இந்தியா உருவாக்கியுள்ளது.

க்ரூஸ் ஏவுகணை பூமியின் மேற்பரப்புக்கு இணையாக இயங்குகிறது. அதன் இலக்கு முற்றிலும் துல்லியமானதாக உள்ளது. க்ரூஸ் ஏவுகணைகள் சிறியவை. இவற்றை செலுத்துவதற்கு முன்பு, எளிதாக மறைத்து வைக்க முடியும். க்ரூஸ் ஏவுகணைகள் வழக்கமான ஆயுதங்கள் அணு குண்டுகள் என இரண்டுக்கும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. (All Images – DRDO)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link