April 1 முதல் மாறுகின்றன இந்த விதிகள்: ITR, TDS-ல் பெரிய மாற்றம், விவரம் உள்ளே

Thu, 11 Mar 2021-5:19 pm,

பட்ஜெட் 2021 இல், நடுத்தர வர்க்கம் மற்றும் சம்பள வர்க்கத்திற்கு சிறப்பு அறிவிப்பு எதுவும் இருக்கவில்லை. 75 வயதைத் தாண்டிய ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கான அறிவிப்புகள் இருந்தன. வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதிகமான மக்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்கிறார்கள். இதற்காக, 2021 வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் மிகவும் வலுவான ஏற்பாட்டைச் செய்தது. ஐ.டி.ஆர் தாக்கல் விதிகள் சம்பள வகுப்புகளுக்கு எளிதாக்கப்பட்டுள்ளன. இனி அவர்கள் ITR தாக்கல் செய்யும்போது எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்காது. அரசாங்கத்தால் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றங்களைப் பற்றி வருமான வரி செலுத்தும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 

2021 ஏப்ரல் 1 முதல், தனிப்பட்ட முறையில், ITR படிவத்தை தாக்கல் செய்வபர்களுக்காக, இந்த செயல்முறை அரசாங்கத்தால் எளிதாக்கப்பட்டுள்ளது.

எல்.டி.சி 2021 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் லாக் டவுன் காரணமாக எல்.டி.சி வரியைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லாக்டௌனின் போது யாரும் எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் மக்களால் எல்.டி.சி யின் நன்மைகளைப் பெற முடியவில்லை. இதனால், அரசாங்கம் அதன் காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

மூத்த குடிமக்கள் அதாவது 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமானத்தை தாக்கல் செய்ய தேவையில்லை. ஓய்வூதியம் மற்றும் நிலையான வைப்புத்தொகையின் வட்டியை சார்ந்து இருப்பவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டது.

ஐ.டி.ஆர் தாக்கல் செய்யாதவர்களுக்கு, குறிப்பாக வணிக வர்க்க மக்களுக்கு அரசாங்கம் விதிகளை மிகவும் கண்டிப்பாக ஆக்கியுள்ளது. இதற்காக Section 206-க்கான ஏற்பாட்டை அரசாங்கம் செய்துள்ளது. இதன்படி, ஒரு நபர் ITR தாக்கல் செய்யாவிட்டால், ஏப்ரல் 1, 2021 முதல், TDS இரட்டிப்பாக வசூலிக்கப்படும். புதிய விதிகளின்படி, TDS அதிகரிக்கும். ஏப்ரல் 1, 2021 முதல், TDS மற்றும் TCL விகிதங்கள் 10-20 சதவீதமாக இருக்கும். இது பொதுவாக 5-10 சதவீதமாக உள்ளது. ITR தாக்கல் செய்யாதவர்கள் மீது அரசாங்கம், இரட்டிப்பு விகிதத்தில் TDS-ஐ வசூலிக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link