கொரோனா தொற்றால் இறந்த திருப்பதி பிச்சைக்காரரின் வீட்டில் பெட்டி பெட்டியாய் பணம்!!
1980 முதல் திருமலையில் வாழ்ந்து வந்த எஸ். ஸ்ரீநிவாசனுக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஒரு வீட்டை அளித்தது. எனினும், ஒரு அரசு திட்டத்தின் கீழ் அவருக்கு இந்த வீடு 2008 -ல் வழங்கப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள்.
அவர் வேறு எந்த பணியும் செய்து வரவில்லை. கடந்த ஒரு வருடமாக சேஷாச்சலா நகரில் உள்ள அவரது வீட்டை சில விஷமிகள் ஆக்கிரமிக்க முயன்றது கவனிக்கப்பட்டது.
பாலிவுட் நடிகை தீபிகா பதுகோனையும் அவர் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது. அதைக் காட்டும் ஒரு புகைப்படமும் கண்டுபிடிக்கப்பட்டது. வி.ஐ.பி பக்தர்களை சந்தித்து நிதி உதவி பெறுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சீனிவாசனின் சொத்துக்கு உரிமை கோர குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பதை அதிகாரிகள் அறிந்தனர். எனவே டிடிடி கூட்டு நிர்வாக அலுவலகம் திருமதி சதா பார்கவியின் உத்தரவின் பேரில் டிடிடி விஜிலென்ஸ் பிரிவு மற்றும் எஸ்டேட் அதிகாரிகள் வருவாய் அதிகாரிகளுடன் விசாரணை நடத்தினர்.
டி.டி.டி விஜிலென்ஸ் / எஸ்டேட் அதிகாரிகள் பூட்டை உடைத்து திங்கள்கிழமை மாலை அவரது வீட்டிற்குள் நுழைந்து சொத்தை பறிமுதல் செய்தனர். வீட்டுப் பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பல்வெறு பெட்டிகளில் பல்வெறு ரூபாய் நோட்டுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. 6,15,050 / - ரொக்கமும் சுமார் 25 கிலோ சில்லறை நாணயங்களும் மீட்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட சொத்து செவ்வாய்க்கிழமை டிடிடி கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படும் என்று தலைமை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி (சி.வி.எஸ்.ஓ) திரு கோபிநாத் ஜட்டி தெரிவித்தார்.