மாத ஓய்வூதியமாய் 50,000 ரூபாயுடன் கோடீஸ்வரராக ஓய்வு பெற இந்த திட்டம் உங்களுக்கு உதவும்

Mon, 14 Dec 2020-1:52 pm,
Retirement Planning of NPS

முதலீட்டிற்கான அனைத்து ஆப்ஷன்களிலும் NPS அற்புதமான ஆப்ஷனாகும். இது பாதுகாப்பாக இருப்பதோடு, நல்ல வருமானத்தையும் தருகிறது. புதிய ஓய்வூதிய திட்டம் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ .50,000 ஓய்வூதியத்தை எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம்.

 

Get monthly pension of Rs.50,000

உங்களுக்கு இப்போது 30 வயது என்று வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் ஒவ்வொரு மாதமும் NPS-ல் 10 ரூபாய் முதலீடு செய்தால், ஓய்வு பெறும் போது, அதாவது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களுக்கு 60 வயதாகும்போது, ​​உங்கள் கைகளில் ரொக்கமாக 1 கோடிக்கு அதிகமான தொகை இருக்கும். இது தவிர, ஒவ்வொரு மாதமும் 52 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமும் வரும். அதாவது, உங்கள் முதுமை எந்த பதற்றமும் இல்லாமல் எளிதாகக் கழியும்.

NPS-ல் முதலீடு

உங்கள் வயது - 30 வயது

ஓய்வு பெறும் வயது – 60 வயது

NPS-ல் மாதா மாதம் முதலீடு - 10,000 ரூபாய்

மதிப்பிடப்பட்ட வருவாய் – 9 சதவிகிதம்

வருடாந்திர காலம் - 20 ஆண்டுகள்

வருடாந்திர திட்டத்தில் முதலீடு - 40%

மதிப்பிடப்பட்ட வருடாந்திர வருவாய் - 6%

Retire as a Crorepati

NPS, அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட திட்டமாகும். அதாவது, ஆண்டு வருமானம் 9 முதல் 12 சதவீதம் வரை இதில் கிடைக்கும். முதிர்ச்சியடைந்ததும், நீங்கள் 40 சதவிகிதத்தை ஏதாவது ஒரு வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்தால், வழக்கமான ஓய்வூதியத்தையும் நீங்கள் பெறலாம். வருடாந்திர வருவாயும் சுமார் 6 சதவீதம் இருக்கும். இப்போது NPS கால்குலேட்டரின் உதவியுடன், 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். NPS கால்குலேட்டரின் படி, ஓய்வுக்குப் பிறகு,

உங்கள் மொத்த தொகை- ரூ .1.84 கோடி

மொத்த தொகை -  ரூ .1.10 கோடி

ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் - ரூ .52,857

இந்த கணக்கீடுகள் அனைத்தும் தோராயமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். புள்ளிவிவரங்கள் மற்றும் வருமானம் வேறுபட்டிருக்கலாம். உங்கள் மாத ஓய்வூதியத்தை குறைக்க அல்லது அதிகரிக்க விரும்பினால், அதன்படி நீங்கள் NPS-ல் முதலீட்டைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ வேண்டும். NPS-ல் மொத்த தொகையும் ஓய்வூதியமும் பல காரணிகளைப் பொறுத்தது. உங்கள், வயது மற்றும் பங்குச் சந்தையின் செயல்பாடு போன்ற காரணிகளைப் பொறுத்து இவை மாறுபடும். 18 வயது முதல் 65 வயது வரையிலான எவரும் NPS-ல் முதலீடு செய்யலாம்.

NPS மூலம், நீங்கள் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வரி சேமிக்க முடியும். வருமான வரியின் பிரிவு 80C-இன் கீழ், நீங்கள் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரியைச் சேமிக்க முடியும். ஆனால் நீங்கள் NPS-ல் முதலீடு செய்தால் ரூ .50,000 கூடுதல் வரிச்சலுகை கிடைக்கும்.

NPS, NPS Tier 1 மற்றும் NPS Tier 2 என இரண்டு வகைப்படும். டயர்-1 இன் குறைந்தபட்ச முதலீடு ரூ .500 ஆகவும், டயர்-2 இல் ரூ .1000 ஆகவும் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. NPS-ல் முதலீடு செய்ய மூன்று ஆப்ஷன்கள் உள்ளன. இதில் முதலீட்டாளர் தனது பணம் எங்கு முதலீடு செய்யப்படும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். பங்குகள், பெருநிறுவன கடன் மற்றும் அரசு பத்திரங்களுக்குள் தேர்வு செய்யலாம். ஈக்விட்டியில் அதிக வெளிப்பாடு இருக்கும்படியால், ​​அது அதிக வருமானத்தையும் தருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link