இந்த வங்கிகளில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால், உங்கள் IFSC, MICR Code மாறக்கூடும்
வங்கி வழங்கிய தகவல்களின்படி, வங்கி வாடிக்கையாளர்களுக்கு கணினி மேம்படுத்தலின் போது, ஆன்லைன் சேவைகள், ஈ-காமர்ஸ் பரிவர்த்தனைகள், ஏடிஎம்கள், இணைய வங்கி, மொபைல் வங்கி மற்றும் UPI பரிவர்த்தனைகள் ஆகியவற்றில் சிரமங்கள் ஏற்படலாம். யூனியன் பாங்க் ஆப் இந்தியா மூன்று வங்கிகளின் கிளைகளையும் தகவல் தொழில்நுட்ப முறைகளையும் மேம்படுத்துகிறது.
இத்தகைய சூழ்நிலையில், வங்கியால் மேம்படுத்தப்படும் பணிகள் காரணமாக, சில கிளைகளின் வாடிக்கையாளர்கள் மட்டுமே சிரமத்தை எதிர்கொள்வார்கள். வங்கி ஏற்கனவே பல கிளைகளை மேம்படுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி வழங்கிய தகவல்களின்படி, இந்த மேம்படுத்தல் பணி காரணமாக, உங்கள் வங்கி கணக்கு எண் உட்பட உங்கள் வங்கி விவரங்களில் எந்த மாற்றமும் இருக்காது. உங்கள் காசோலை புத்தகம், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டை சாதாரண நாட்களைப் போலவே நீங்கள் பயன்படுத்த முடியும். வங்கி தரப்பிலிருந்து சம்பள கணக்கு, ஓய்வூதிய கணக்கு மற்றும் கடன் கணக்குகளில் எந்த மாற்றமும் இருக்காது.
ஐடி மேம்படுத்தலுக்குப் பிறகு, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பாஸ் புக் கிடைக்கும். இந்த பாஸ் புக் வாடிக்கையாளர்களுக்கு முதல் முறை கிளையில் வழங்கப்படும். வங்கி வாடிக்கையாளர்களின் IFSC / MICR குறியீடும் மாற்றப்படும். இருப்பினும், வாடிக்கையாளர்களின் வசதியை மனதில் கொண்டு, பழைய குறியீடு 20 மார்ச் 2021 வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://tinyurl.com/v7sxgby என்ற இந்த இணைப்பு மூலம் புதிய IFSC குறியீட்டை சரி பார்க்கலாம். எதிர்காலத்தில் RTGS, NEFT மற்றும் IMPS மூலம் கட்டணம் செலுத்த 01.04.2021 முதல் புதிய IFSC Code-ஐ பயன்படுத்துமாறு வங்கி மூலம் வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேஷன் மற்றும் ஆந்திரா வங்கி வாடிக்கையாளர்களும் யூனியன் வங்கி போர்டல் மூலம் இணைய வங்கி சேவைகளை அணுக முடியும். வாடிக்கையாளர்களின் பயனர் ஐடி / கடவுச்சொல்லில் எந்த மாற்றமும் செய்யப்படாது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக புதிய கடவுச்சொல்லை உருவாக்க வங்கி வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
https://www.unionbankonline.co.in/home.html என்ற இந்த இணைப்பு மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். யூனியன் வங்கியின் மொபைல் வங்கி செயலியான UMobile-ன் மூலம் வாடிக்கையாளர்கள் மொபைல் வங்கி சேவைகளைப் பெற முடியும். இந்த செயலியை வாடிக்கையாளர்கள் Google Play Store அல்லது Apple App Store-ரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
வங்கி செய்த ஐடி சிஸ்டம்ஸ் புதுப்பிப்பு பற்றிய கூடுதல் தகவலுக்கு வங்கி வழங்கிய https://tinyurl.com/v7sxgby என்ற இணைப்பை நீங்கள் பார்வையிடலாம். அனைத்து வகையான கேள்விகளுக்கும் இங்கே பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் கட்டணமில்லா 1800-208-2244 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.