Numerology: அடிக்கடி தற்செயலாக இந்த எண்ணை பார்க்கிறீர்களா? வாழ்க்கை வசந்தமாகப் போகிறது!!

Fri, 15 Jan 2021-10:07 pm,
Importance of Number 11

எண் கணிதத்தின் படி, 11 என்ற எண், பொறுமை, நேர்மை, உணர்திறன் மற்றும் ஆன்மீக புரிதலைக் குறிக்கிறது. 11 என்ற எண்ணை இரண்டு முறை பார்ப்பது ஒரு முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது. இது குறித்த பல ஊகங்களை நாம் கவனிக்க வேண்டியது மிக முக்கியமாகும். புதிய தொடக்கங்களுக்கு 11:11 என்ற நேரம் மிகவும் நல்ல நேரமாக கருதப்படுகிறது.

When it is 11:11 in the clock, be alert

நம் அனைவருக்கும் கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. நாம் நேரத்தை கை கடிகாரத்திலோ, சுவர் கடிகாரத்திலோ அல்லது டெஸ்க்டாப் திரையிலோ பார்க்கிறோம். இருப்பினும், நீங்கள் ஏதோ ஒரு வேலையில் பிஸியாக இருந்து, தற்செயலாக கடிகாரத்தை பார்க்கும்போது அதில் 11:11 என்ற நேரம் இருதால், நீங்கள் மகிழ்ச்சியடைவதற்கான நேரம் அது. ​ஜோதிட சாஸ்திரம் மற்றும் விஞ்ஞானத்தின் அடிப்படையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணாகும். ஆங்கிலத்தில், 11:11 ஏஞ்சல் எண்கள் என்று அழைக்கப்படுகிறது.

It is not coincidence to see 11:11

நீங்கள் தொடர்ந்து பல நாட்கள் கடிகாரத்தில் தற்செயலாக 11:11 ஐக் கண்டால், அது ஒரு சாதாரண நிகழ்வு என்று கருத வேண்டாம். எண் கணிதத்தின் படி, கடிகாரத்தின் அனைத்து இலக்கங்களும் சமமாக இருக்கும் ஒரே நேரம் 11: 11 மட்டுமே. ஜோதிடத்தைப் பொறுத்தவரை இந்த தருணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 11:11 என்ற நேரத்தை பார்த்தபோது, உடலில் ஒரு வித சிலிர்ப்பு ஏற்பட்டதாக பலர் கூறியுள்ளனர். இந்த சிறப்பு எண்ணை பல வகைகளில் நீங்கள் மீண்டும் மீண்டும் தற்செயலாகப் பார்த்தால், பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு சக்தி உங்களை ஏதோ ஒரு விஷயத்தை நோக்கி சுட்டிக்காட்டுகிறது என்று நம்பப்படுகிறது.

11:11 ஐப் பற்றிய பல நம்பிக்கைகள் மற்றும் கோட்பாடுகள் உள்ளன. அவற்றை நம்புவதும் நம்பாததும் தனி நபர்களைப் பொறுத்தது. இந்த எண்ணை ஒருவர் பார்க்கும்போதெல்லாம், அவரது வாழ்க்கையின் ஒரு புதிய திசை திறக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு வழிகாட்ட கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டும். இந்த நேரத்தில் செய்யும் பிரார்த்தனையை கடவுள் ஒருபோதும் நிராகரிப்பதில்லை.

மிகவும் பொதுவான ஒரு நம்பிக்கையின் படி, இந்த எண்ணை நீங்கள் தற்செயலாக பார்த்தால், அந்த நேரத்தில் உங்கள் ஏதாவது ஒரு ஆசையைப் பற்றி நீங்கள் நீனைத்துக்கொள்ளலாம். அந்த நேரத்தில் நாம் செய்யும் பிரார்த்தனைகள் கண்டிப்பாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

11:11 என்ற எண்ணை அடிக்கடி நீங்கள் தற்செயலாகக் கண்டால், உங்களைச் சுற்றி ஏதோ பெரிய நிகழ்வு நடக்கவிருக்கிறது என்று பொருள். ஆகையால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் 11:11 என்ற அந்த எண்ணை பார்க்கும் வேளையில் உங்கள் வாழ்க்கைக்கான ஒரு முக்கியமான முடிவை யாரோ எங்கோ எடுத்துக்கொண்டிருக்கலாம்.

நீங்கள் தற்செயலாக 11:11 என்ற எண்ணை அடிக்கடி பார்த்தால், சற்று நிதானித்து இது குறித்து சிந்தித்து செயல்படுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் வேலையை நிறுத்துங்கள். உங்களைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பற்றி சிந்தியுங்கள். கண்களை மூடிக்கொண்டு மனதை நிதானப்படுத்துங்கள். நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்கப் போகிறீர்கள் என்றால், இந்த தருணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஆழ்மனதை புரிந்துகொள்வதிலும், பிரபஞ்சத்தின் கண்ணுக்கு தெரியாத சக்தியைப் புரிந்து கொள்வதிலும் இந்த தருணம் உங்களுக்கு உதவும். உங்கள் உலகத்தை மாற்றக்கூடிய அறிகுறிகளை இந்த நேரத்தில் நீங்கள் புரிந்துகொள்ளலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link