கஜமுகனுக்கு ஆவணி வளர்பிறை சதுர்த்தி விரதம் வழிபாடு! முருகனுக்கு மூத்தோனின் பிறந்தநாள்!

Fri, 30 Aug 2024-10:06 am,

விநாயகர் மிகவும் எளிமையானவர், வணங்குவதற்கு எளிதானவர். நினைத்த மாத்திரத்தில் நமக்கு வரங்களை அளிக்கும் சித்திவிநாயகர். சிவசக்தியின் மூத்த மைந்தனான இவருக்கு பல பெயர்கள் உண்டு

கணங்களிற்கு அதிபதி என்பதால் கணபதி என்று பெயர். பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாக விளங்கும் சிவபுத்திரர் கணபதி என்று அழைக்கப்படுகிறார்

யானை முகத்தை உடையவரான கணபதி ஆனைமுகன் என்றழைக்கப்படுகிறார்

யானையின் மறுபெயர் கஜம். யானையின் தலையைக் கொண்டவர் என்பதால் கஜமுகன் என்று ஆனைமுகனை அழைக்கிறோம்  

விக்னங்களை போக்கும் சிவமைந்தன் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்

கணபதிக்கு ஐந்து கரங்கள் இருப்பதால் ஐங்கரன் என்று அழைக்கப்படுகிறார்

சக்தி அன்னை பார்வதி, கையால் பிடித்து வைத்ததால், பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். விநாயகப் பெருமான், எங்கு எப்போது நினைத்தாலும் எளிமையாக வணங்கக்கூடியவர். அனைவருக்கும் பிள்ளையைப் போல உதவுபவர்

 

ஒற்றை தந்தத்தை கொண்டுள்ளதால் ஏகதந்தன் என்று பெயர் பெற்றவர் கஜமுகன்

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link