IPL Auction 2022: ஐபில் ஏலத்தில் ஒரே நாளில் கோடீஸ்வரரான கிரிக்கெட்டர்கள்

Sat, 12 Feb 2022-10:32 am,

இளம் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சகாரியாவுக்கு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துது. 23 வயதான சேத்தன் சகாரியா ஐபிஎல் போட்டிக்கு முன்பே தனது சகோதரனை இழந்தார். அவரது சகோதரர் தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் இவரது தந்தை கொரோனாவால் உயிரிழந்தார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. காலணிகள் வாங்கக் கூட பணம் இல்லாத சேத்தன் சகாரியாவை ஒரு கோடியே 20 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.    (Photo Courtesy - PTI

 

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே ஜம்மு காஷ்மீர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அசத்தினார். உம்ரான் மாலிக்கின் வேகமான ஆட்டத்தை கருத்தில் கொண்டு ஹைதராபாத் அணி இந்த சீசனிலும் 4 கோடி கொடுத்து அவரை தக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு மாலிக்கை ஐதராபாத் அணி ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது. உம்ரானின் தந்தை ஜம்மு காஷ்மீரில் காய்கறி கடை வைத்திருந்த  வியாபாரியின் மகன் உம்ரான். (Photo Courtesy - PTI)

யஷஸ்வி ஜெய்ஸ்வாலை 4 கோடிக்கு ராஜஸ்தான் அணி தக்கவைத்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் அணி 2.4 கோடிக்கு வாங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், தனது செலவுகளைச் சமாளிக்க, பயிற்சிக்குப் பிறகு, இரவில் பானிபூரி விற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  (Photo Courtesy - PTI)

டி.நடராஜனின் கதையும் போராட்டங்கள் நிறைந்ததுதான். டி.நடராஜன் முதன்முறையாக 2017ஆம் ஆண்டு ஏலம் எடுக்கப்பட்டார். இவரின் அடிப்படை விலை 10 லட்சம் ரூபாய் தான், ஆனால் பஞ்சாப் இந்த பவுலரை மூன்று கோடிக்கு ஏலம் எடுத்தது.

நடராஜனின் தாயார் சாலையோரத்தில் உணவகம் நடத்துபவர். அப்பா ரயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை செய்தவர். ஐந்து குழந்தைகளில் ஒருவராக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நடராஜன், சேலத்தில் பிறாந்தவர்.   (Photo Courtesy - PTI)

இந்த சீசனில் முகமது சிராஜ் RCB அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் உடன் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சிராஜ் தற்போது இணைந்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த வீரரை 2017 ஆம் ஆண்டில் முதன்முதலில் 2.6 கோடிக்கு வாங்கியது. தற்போது சிராஜ் ஏழு கோடிக்கு ஆர்சிபியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். சிராஜின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநராக இருந்தார், கடந்த ஆண்டு நவம்பரில் சிராஜ் ஆஸ்திரேலியாவில் கட்டாயமாக 14 நாள் தனிமைப்படுத்தலில் இருந்தபோது, ​​அவரது தந்தை அந்த நேரத்தில் இறந்துவிட்டார். 

(Photo Courtesy- PTI)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link