பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 17வது தவணை! ஜூன் 17ம் தேதி விவசாயிகளுக்கு கிடைக்கும்!
ஜூன் 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது அதாவது, இன்று முதல் மூன்று நாட்கள் காத்திருந்த பின், தகுதியான விவசாயிகளின் கணக்கில் பணம் வரும்.
9.3 விவசாயிகளின் கணக்குகளுக்கு 20,000 கோடி ரூபாய் மாற்றப்படும்.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு குறைந்தாட்ச வருமான ஆதரவை வழங்கும் விதமான இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டமாகும். கடந்த 2019ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் பிஎம் கிசான் திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய நிதியுதவி வழங்குவதாகும்.
இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணை மூன்றிலிருந்து நான்றாக உயர்த்தப்படக்கூடும் என இணையதளங்களில் வெளியாகும் ஊகங்கள் தெரிவிக்கின்றன
நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களில், தகுதியுள்ளவர்ளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தப் பணம் ஆண்டு முழுவதும் தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6000ஐ அரசு நேரடியாக வரவு வைக்கிறது.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் தொகை வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் அடுத்த (17வது) தவணை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவிருக்கிறது.