இலவச ரேஷன் பெறுவோருக்கு செம ஜாக்பாட் அப்டேட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

Mon, 06 Nov 2023-3:19 pm,

தற்போது, ​​தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், பயனாளிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.1-3 என்ற அளவில் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. அந்தோத்யா அன்ன யோஜனா (AAY) குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 35 கிலோ தானியங்கள் வழங்கப்படுகிறது. PMGKAY இன் காலக்கெடுவை டிசம்பர் 31, 2023 அன்று முடிப்பதற்கு முன் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

PMGKAY 2020 இல் கோவிட் தொற்றுநோய்களின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ், NFSA ஒதுக்கீட்டின் கீழ் தனிநபர்களுக்கு 5 கிலோ உணவு தானியங்களை அரசாங்கம் இலவசமாக வழங்குகிறது. மத்திய அரசு PMGKAY மற்றும் NFSA திட்டங்களை இணைத்துள்ளது.

அமைச்சரவையின் இந்த தீர்மானத்தை 'நாட்டின் பின்தங்கிய மக்களுக்கு புத்தாண்டு பரிசு' என அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். NFSA-ன் கீழ் 81.35 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. தானியங்களுக்காக பயனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்றார்.

NFSA 2013 இல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதன் கீழ், அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், உணவுத்துறை அமைச்சர், பியூஷ் கோயல், PMGKAY இன் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுமார் 1,118 லட்சம் டன் உணவு தானியங்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

உணவு மானியம் மற்றும் மத்திய உதவிக்கான மொத்த அங்கீகரிக்கப்பட்ட பட்ஜெட், முதல் ஏழாவது வரை, சுமார் 3.91 லட்சம் கோடி ரூபாய் என்று அவர் தெரிவித்தார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link