புதிய நாடாளுமன்ற வளாகத்தில் வெண்கல தேசிய சின்னத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி
புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பா் 10ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்னர் இந்த கட்டடத்தை கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணிகளை எதிர்த்த நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன. எனினும் உச்ச நீதிமன்றம், வழக்குகளை தள்ளுபடி புதிய நாடாளுமன்ற கட்டிட வளாக திட்டமான சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு அனுமதி அளித்தது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.