சொகுசு கார் முதல்... பங்களா வரை... சிராக் பாஸ்வானின் சொத்து விபரம் இது தான்..!!
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) கட்சி ஐந்து இடங்களில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்ற நிலையில், அதன் தலைவர், சிராக் பாஸ்வான் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். சிராக் பாஸ்வான் போட்டியிட்ட ஹாஜிபூர் தொகுதியில் அவரது தந்தை மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் 9 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல்: சினிமாவில் நடித்து, பின் அரசியலுக்கு வந்த சிராக் பாஸ்வான் கடந்த 2014-ம் ஆண்டு ஜமுய் பீகாரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது தந்தை ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவுக்குப் பிறகு, அவர் இந்த முறை பாரம்பரிய தொகுதியான ஹாஜிபூரில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளார்.
காப்பீடு: தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ள தகவல்கள் மூலம் அவரிடம் காப்பீட்டு பாலிஸி எதுவும் இல்லை அல்லது அவர் என்எஸ்எஸ், தபால் சேமிப்புகளில் முதலீடு செய்யவில்லை என்பதும் தெரிய வருகிறது.
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ள தகவல்கள் மூலம், கார்களைப் பற்றி குறிப்பிடுகையில், அவர் பெயரில் ஃபார்ச்சூனர் கார் (சுமார் ரூ. 30 லட்சம்) மற்றும் ஜிப்சி கார் (சுமார் ரூ. 5 லட்சம்) உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
தங்க நகைகள்: மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பிடித்த சிராக் பாஸ்வானிடம் உள்ள தங்க நகைகள் பற்றி குறிப்பிடுகையில், ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் வைத்துள்ளார் என்பது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்கள் மூலம்தெரியவந்துள்ளது.
பங்கு முதலீடு: சிராக் பாஸ்வான் பங்குகளில் நிறைய பணம் முதலீடு செய்துள்ளார் மற்றும் பல நிறுவனங்களின் பங்குகள் அவரது போர்ட்ஃபோலியோவில் உள்ளன. தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவர் 6 நிறுவனங்களில் சுமார் ரூ.35.91 லட்சம் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குகள்: சங்கத்மோச்சன் மெர்கன்டைல் பிரைவேட் லிமிடெட், அக்வாவின்ட்ரேட் பிரைவேட் லிமிடெட், ஸ்ட்ராங்பில்லர் பிரைவேட் லிமிடெட், டிவைன் டிஸ்ட்ரிபியூட்டர் பிரைவேட் லிமிடெட், பிராப்யம் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் சிஎஸ்பி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் பங்குகள் இதில் அடங்கும்.
அசையா சொத்துக்கள்: சிராக் பாஸ்வானுக்கு சொந்தமான அசையா சொத்துக்கள் பற்றி பேசுகையில், அவர் பெயரில் விவசாய நிலம் எதுவும் இல்லை. இது தவிர, சிராக் பாஸ்வானுக்கு சொந்தமாக எந்த வணிக கட்டிடமும் இல்லை. ஆனால், ஸ்ரீ கிருஷ்ணபுரி பாட்னாவில் அவரது பெயரில் ஒரு ஆடம்பர வீடு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் மதிப்பு ரூ.1 கோடியே 2 லட்சம் என கூறப்படுகிறது.