குஜராத்தில் ரயில்நிலையம், ரோபோடிக்ஸ் கேலரியை பிரதமர் திறந்து வைத்தார்
இந்தியா போன்ற பெரிய நாட்டில் வசதி மற்றும் வளர்ச்சியின் புதிய பரிமாணங்களை இந்திய ரயில்வே துறை கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
கான்கிரீட் கட்டுமானம் மட்டுமல்லாமல் தனது சொந்த குணநலனுடன் கூடிய இயற்கையான உள்கட்டமைப்பை உருவாக்குவதே நாட்டின் லட்சியம் என்று குறிப்பிட்டார்.
அறிவியல் நகரத்தில் நிறுவப்பட்டுள்ள நீர்வாழ் உயிரினங்கள் காட்சியகம் ரசிக்கத்தக்கதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். நமது நாட்டில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே முன்னணி நீர்வாழ் உயிரினங்களின் காட்சியகமாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
எந்திரவியல் காட்சியகத்தில் ரோபோக்களுடன் உரையாடுவது மட்டுமல்லாமல் ரோபோடிக்ஸ் துறையில் நமது இளைஞர்கள் பணிபுரிவதற்கான ஊக்கத்தையும் ஆர்வத்தையும் அவர்களது மனங்களில் விதைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
காந்திநகர் ரயில் நிலையம் 71 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.