Pradhanmantri Sangrahalaya: பிரதமர் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
பிரதமர் அருங்காட்சியகம் (பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா) நேரு அருங்காட்சியகத்தின் புதிய வடிவமாகும். இதில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் அனைத்து பிரதமர்களின் பங்களிப்பையும் எடுத்த காட்ட எடுத்த முயற்சியாகும். எனவே 'பிரதமர் அருங்காட்சியகம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (என்எம்எம்எல்) நிர்வாகக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், பண்டிட் ஜவஹர்லால் நேரு, பிரதமரின் சங்க்ரஹாலயாவில் முந்தைய பிரதமர் பண்டிட் நேரு நாட்டில் ஜனநாயக ஸ்தாபனத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கியப் பங்காற்றியது குறித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
பிரதமர் அருங்காட்சியகத்தில் (பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா), பிரதமர் நேரு முதல் டாக்டர் மன்மோகன் சிங் வரையிலான அனைத்து பிரதமர்களின் வாழ்க்கை, பணி மற்றும் பங்களிப்பு மற்றும் பல ஜனநாயக விழுமியங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தின் முன், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் உள்ளது.
2020 ஜனவரியில் அருங்காட்சியகத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராக நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டார். பிரதமரின் அருங்காட்சியகத்தை பெரிதாக்க வேண்டும் என்றார். இது ஒரு வகையில் சிந்தனைக் களஞ்சியமாக இருக்கும்.
பிரதமர் அருங்காட்சியகத்தில் (பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா) இந்திய சுதந்திரப் போராட்டத்திலிருந்து ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் இதில் காட்டப்பட்டுள்ளன. நமது பிரதமர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு எப்படி நாட்டை இந்த நிலைக்கு கொண்டு சென்றனர் என்பதை இது காட்டுகிறது.
அனைத்து பிரதமர்கள் தொடர்பாக புகைப்படங்கள் தகவல்கள் பிரதமரின் சங்க்ரஹாலயாவில் வைக்கப்பட்டுள்ளன. இதனுடன், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும், அவரது உரைகளையும் காணலாம். இந்த அருங்காட்சியகம் இந்திய இளைஞர்களுக்காக பிரத்யேகமாக தகவல்களை வழங்கியுள்ளது. மேலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிதாகவும், சுவாரஸ்யமாகவும், விரிவானதாகவும் உள்ளது.