அரசியல்வாதியான சமூக ஆர்வலர்: இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி

Sun, 12 Jun 2022-10:45 am,

கிரண் பேடியின் 1975 ஆம் ஆண்டு டெல்லியின் சாணக்யபுரி துணைப்பிரிவில் தனது முதல் பணியின்போது, குடியரசு தின அணிவகுப்பில் டெல்லி காவல்துறையின் முழு ஆண் குழுவிற்கும் தலைமை தாங்கிய முதல் பெண்மணி என்ற பெயர் பெற்றார்.

பஞ்சாபி குடும்பத்தில் பிரகாஷ் லால் பெஷாவாரியா மற்றும் பிரேம் லதா பெஷாவாரியா ஆகியோருக்கு பிறந்தார். பார்க்கிங் விதிமீறலுக்காக பிரதமர் இந்திரா காந்தியின் காரை இழுத்துச் சென்றதற்காக ‘கிரேன் பேடி’ என்று அழைக்கப்படும் அவர், கண்டிப்பான நடைமுறைக்காக பெயர் பெற்றவர்

கிரண் பேடி ஒன்பது வயதிலேயே டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். 1964 ஆம் ஆண்டில், டெல்லி ஜிம்கானாவில் தேசிய ஜூனியர் லான் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று, அமிர்தசரஸுக்கு வெளியே தனது முதல் போட்டியில் விளையாடினார். 1965 மற்றும் 1978 க்கு இடையில், பேடி பல டென்னிஸ் சாம்பியன்ஷிப்களை வென்றார்.

கிரண் பேடி தனது கணவர் பிரிஜ் பேடியை அமிர்தசரஸ் டென்னிஸ் மைதானத்தில் சந்தித்தார். 9 மார்ச் 1972 அன்று, உள்ளூர் கோவிலில் எளிய விழாவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்

16 ஜூலை 1972 இல், கிரண் பேடி முசோரியில் உள்ள தேசிய நிர்வாக அகாடமியில் தனது போலீஸ் பயிற்சியைத் தொடங்கினார். 80 ஆண்கள் கொண்ட குழுவில் ஒரே பெண்மணியான இவர் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.

2003 ஆம் ஆண்டில், கிரண் பேடி ஐக்கிய நாடுகளின் காவல்துறையின் தலைவராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி நடவடிக்கைத் துறையில் காவல்துறை ஆலோசகராகவும் நியமிக்கப்பட்ட முதல் இந்திய மற்றும் முதல் பெண்மணி ஆனார்.

பாஜகவில் சேருவதற்கு முன்பு, கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஊழலற்ற இந்தியா என்ற யோசனையால் பெரிதும் பாதிக்கப்பட்டு, அவரது புதிய அமைப்பான ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். கட்சி மற்றும் அதன் சித்தாந்தத்துடன் ஏற்பட்ட அதிருப்தியால் அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலக முடிவு செய்தார்.

2011ஆம் ஆண்டு அன்னா ஹசாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தீவிரத் தலைவரான கிரண் பேடி, 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

கிரண் பேடி மே 28, 2016 முதல் பிப்ரவரி 16, 2021 வரை புதுச்சேரியின் 24வது லெப்டினன்ட் கவர்னராக பணியாற்றினார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link