ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், புதிய திட்டத்தை தொடங்கிய அரசு
பொங்கல் பண்டிகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பரிசுகள் வழங்குவதாக அறிவித்திருந்தது. இப்போது அந்த அறிவிப்பின்படி அரசு செயல்பட்டு வருகின்றது.
திட்டம் எப்போது தொடங்கப்பட்டது இத்திட்டம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி மாநில அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி தகுதியுள்ள குடும்பங்களுக்கு ரூ.1107 மதிப்பிலான பொங்கல் பரிசு வழக்கப்படும்.
ரொக்க தொகை ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசுத் தொகையில் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ அரிசி, கரும்பு உள்ளிட்டவையும், அதனுடன் ரொக்கமாக ரூ.1,000 வழங்கப்படும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் குளறுபடி இருந்தால் என்ன செய்வது? பொங்கல் பரிசுத் தொகுப்பில் குளறுபடி, முறைகேடுகள் நடந்தால் பொதுமக்கள் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.