பீஸ்ட் Girl-ன் காஸ்டிலி போட்டோஸ் - பூஜா ஹெக்டே லேட்டஸ்ட்
படத்திற்கான பிரஸ்மீட்டில் அரபிக்குத்து பாடலுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு தெரிவித்தனர். அப்போது, அந்தப் பாடலுக்கு ஆடுமாறு கேட்டுக் கொண்டனர்.
விஜய் ஹீரோயின் பூஜா உற்சாகமாக நடனமாட இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வேடிக்கை பார்த்தனர்.
ஆனால் பூஜா ஹெக்டே, அனிரூத்தை வலுக்கட்டாயமாக நடனமாட அழைத்தார். அனிரூத்தும் அரபிக்குத்து Signature ஸ்டெப்களை போட்டார்.
அவர்கள் ஆடுவதைப் பார்த்து நெல்சன் திலீப்குமாரும் டான்ஸ் ஆடினார்.
அதாவது விஜய் ஹீரோயின் பூஜா ஹெக்டேவுடன் ஜோடி போட்டு, நெல்சன் திலீப்குமாரும், அனிரூத்தும் நடனமாடினர்.
ஒருகட்டத்தில் நெல்சன் நிற்க, அனிரூத் ஜாலியாக ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த காஸ்டியூம் கவனத்தை ஈர்த்தது.