Kedarnath Temple: அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட கேதார்நாத் கோயிலின் அற்புதத் தோற்றம்
கேதார்நாத் கோயில் (Kedarnath Temple) இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவதலங்களில் ஒன்றாகும். உத்தராகாண்ட் மாநிலத்தில், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது கேதார்நாத் ஆலயம்.
குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. கேதார்நாத் கோயில், பஞ்ச கேதார தலங்களுல் ஒன்றாகும்.
மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது கேதார்நாத் ஆலயம். இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் அட்சயத் திருதியை முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.
நேரடியாக சாலை வழியாக அணுக முடியாத உயரத்தில் அமைந்துள்ளது கேதார்நாத் ஆலயம். கௌரிகுண்ட் என்ற அடிவாரப் பகுதியில் இருந்து 14 கி.மீ. தொலைவு மலை உச்சியில் அமைந்துள்ளது கேதாரநாத் கோவில். சம்பந்தராலும் சுந்தரராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்று கேதார்நாத் ஆலயம்.
கேதார்ந்தாத்தில், பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாக நம்பப்படுகிறது. ஆதி சங்கரர் இந்த ஆலயத்தை புனரமைத்தார்.