மாதம் 80000 சம்பாதிக்க 5000 ரூபாய் முதலீடு போதும்! நம்பகமான தொழில் வாய்ப்பு
தபால் நிலைய திட்டங்களில் மட்டுமின்றி, தபால் நிலைய ஃப்ரான்சைசிஸ் உரிமையைப் பெற்றும் வருமானம் ஈட்டலாம். இதற்கு செய்ய வேண்டிய முதலீடும் குறைவு
தபால் நிலையத்தின் மூலம் மக்கள் தற்போது பல வசதிகளைப் பெறுகின்றனர். தபால் அலுவலகங்கள் என்பது கிராமப்புற மக்களுக்கு வங்கி சேவைகளை வழங்குகின்றன
எல்லா இடங்களிலும் தபால் நிலையத்தை தொடங்க முடியாது என்பதால், தனிநபர்கள் அல்லது ஒரு குழுவுக்கோ ஃப்ரான்சைசிஸ் வழங்கப்படுகிறது. எப்படி தபால் நிலைய ஃப்ரான்சைசிஸ் உரிமையை எடுக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
18 வயதுக்கு அதிகமான இந்தியர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் இருந்து 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஃப்ரான்சைசிஸ் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய அஞ்சல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். தபால் நிலைய சேவைகளுக்கு கிடைக்கும் கமிஷன் தொடர்பான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பதிவு செய்யப்பட்ட போஸ்டுக்கு 3 ரூபாய், ஸ்பீட் போஸ்டுக்கு செய்தால் 5 ரூபாய், 100 முதல் 200 ரூபாய் வரையிலான மணி ஆர்டர்களுக்கு 3.50 ரூபாய், 200 ரூபாய்க்கு மேல் மணி ஆர்டர்களுக்கு 5 ரூபாய், பதிவு மற்றும் ஸ்பீட் போஸ்ட்டிற்கு மாதம் 1000 ரூபாய் என கமிஷன் கிடைக்கும்.
தபால் துறையின் (https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf) என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் கிளிக் செய்யலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதன் பின்னரே வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை வழங்கலாம்.