Post Office RDகளில் பணம் செலுத்தி லட்சக்கணக்கான பணத்தை திரும்பப்பெறலாம்

Thu, 08 Apr 2021-6:53 pm,

தபால் அலுவலகம் Recurring Deposit ஐந்து ஆண்டுகளுக்கானது. அதாவது 5 ஆண்டுகளுக்குப் பிறகு தான் முதிர்வு காலம் வரும். ஆனால், இதை 5-5 ஆண்டுகளாக மேலும் நீட்டிக்க முடியும். மாதந்தோறும் குறைந்தது 100 ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். வைப்புத்தொகை 10 ரூபாயின் மடங்காக அதாவது, 10, 20, 30.. ரூபாய் என்று இருக்க வேண்டும். பணத்தை முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை.

ஒரு முதலீட்டாளர் தபால் நிலையத்தின் தொடர் வைப்புத் திட்டம் (Recurring Deposit) 3000 ரூபாய் வீதம் ஒவ்வொரு மாதமும் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் முதிர்ச்சியாகும் காலத்தில் இந்த தொகை சுமார் ரூ .2,09,090 லட்சம் இருக்கும். இந்தியா போஸ்டின் வலைத்தளத்தின்படி, தபால் அலுவலக ஆர்.டி.க்கு ஆண்டுதோறும் 5.8 சதவீத வட்டி கிடைக்கிறது. கூட்டு வட்டியாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் காலாண்டு அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது.

அஞ்சல சிறு சேமிப்பு திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பானவை. ஏனென்றால், தபால் துறை பணத்தை திருப்பித் தரத் தவறினால், அஞ்சல் அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு இறையாண்மை உத்தரவாதம் உள்ளது. அஞ்சல் துறை முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பித் தரத் தவறினால், அரசாங்கம் முன்னோக்கிச் சென்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை கொடுப்பதாக உத்தரவாதம் கொடுக்கிறது. தபால் அலுவலக திட்டத்தில் செலுத்தப்படும் பணம் அரசாங்கத்தால் அதன் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால்தான் அஞ்சல திட்டங்களுக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது. மறுபுறம், வங்கியில் உங்கள் பணம் 100 சதவீதம் பாதுகாப்பாக இருப்பதில்லை. ஒரு வங்கி நட்டம் அடைந்தால்,  வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் திரும்பக் கொடுப்பதாக DICGC உத்தரவாதம் அளிக்கிறது. இந்த விதி வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். இதில் வைப்புத்தொகை மற்றும் வட்டி இரண்டுமே அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.டி கணக்குகளை தனியாகவும், கூட்டாகவும் திறக்க முடியும். கூட்டுக் கணக்கில் அதிகபட்சம் 3 பெரியவர்கள் இருக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயர்களில் தொடங்கப்படும் கணக்குக்கு பாதுகாவலர்களை நியமிக்கலாம். ஆர்.டி.யின் 5 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்தாலும், ஐந்தாண்டு கால அடிப்படையி நீட்டிக்க முடியும். கணக்கு திறக்கும் போது நாமினேஷன் செய்யும் வசதியும் உள்ளது. ஆர்.டி கணக்கைத் திறந்த நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்ச்சி காலத்திற்கு முன்னரே கணக்கை மூடுவது தொடர்பான தெரிவையும் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் ஆர்.டி கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றலாம். சரியான நேரத்தில் பணத்தை டெபாசிட் செய்யாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இது 100 ரூபாய்க்கு 1 ரூபாய் என்ற வீதத்தில் இருக்கும். ஒரு வருடத்திற்குப் பிறகு வைப்புத்தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெறுவதற்கான வசதியும் உள்ளது. இந்த கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தலாம். IPPB சேமிப்புக் கணக்கு மூலம் ஆன்லைனில் டெபாசிட் செய்யும் வசதியும் உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link