கொழுப்பை எரிக்க உதவும் பொட்டாசியம் நிறைந்த ‘சில’ உணவுகள்!
உடல் எடையை குறைக்க உணவில் சேர்க்கக்கூடிய பொட்டாசியம் நிறைந்த உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம். இவை இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
ஆளி விதைகளில் பொட்டாஷியம் தவிர ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லிக்னான்கள் நிறைந்துள்ளவை. இதை பச்சையாக சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்தியில் கலக்கலாம், அவை எடையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன.
புரதம் மட்டுமல்ல, மீனில் பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இது எடை இழப்பிற்கு மட்டுமல்லாது மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், ஆரோக்கியமான எடை இழப்புக்கு கொத்துக்கடலை உண்பது சிறந்த வழி. இதில் புரதம் நிறைந்துள்ளது மற்றும் சாலட், சப்ஜி போன்ற வடிவங்களில் சாப்பிடலாம் அல்லது சுவையான சுண்டல் செய்யலாம்.
ராஜ்மாவில் பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் 35% சேர்த்துக்கொள்ளலாம்.
வாழைக்காயை சாம்பார்/கறி என எந்த வடிவத்திலும் பயன்படுத்தலாம். அல்லது பழமாகவே சாப்பிடலாம்.