மூளையின் ஆற்றலை மேம்படுத்த... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!

Sat, 23 Mar 2024-9:21 pm,

உடற்பயிற்சி, உடலுக்கு மட்டுமல்ல மூளை ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும். உடல் பயிற்சி மன அழுத்தத்தை குறைத்து,  மூளை விழிப்புணர்வை அதிகரிக்கிறது. 20 முதல் 30 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சியின் மூலம் நீண்ட கால அறிவாற்றல் மேம்படுத்தலாம் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, மூளைக்கு ஆற்றலை கொடுக்கும் உலர் பழங்கள், விதைகள், சால்மன், முழு தானியங்கள், ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது பலனளிக்கு

மூளையைத் தூண்டும் பயிற்சிகள், மூளைக்கான விளையாட்டுக்கள் நரம்பு செல்களுக்கு புத்துயிர் அளித்து மூளை புதிய நியூரான்களை உருவாக்கவும், மூளையில் எதிர்கால உயிரணு இழப்பை தடுக்கவும் உதவக்கூடும் என்று மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீது நடத்தப்பட்ட  பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா தியானம் போன்ற பயிற்சிகள் செய்வதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதோடு நடுத்தர வயதில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு  அறிவாற்றல் இழப்பு அதிகமாக இருக்கும்.  யோகா மூலம் இரத்தம் அழுத்தம், மன அழுத்தம் இரண்டும் கட்டுப்படும்.

பொதுவாகவே மது பானம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எப்போதாவது எடுத்துக் கொள்வதில் தவறில்லை. அப்ப்பொழுதும், இரண்டு பெக் மதுபானத்திற்கு மேல் உட்கொள்ள வேண்டாம். மது பானம் மூளையின் செயல் திறனை பாதித்து விடும். அளவோடு உட்கொளவதே நல்லது.

நினைவாற்றல் மற்றும் மூளை ஆற்றலை முக்கிய காரணிகளில் ஒன்று போதிய தூக்கம் இல்லாத நிலை. ஆழ்ந்த தூக்கம், நினைவகத்தை ஒருங்கிணைத்து, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அறிவாற்றலுடன் செயல்பட ஏழு முதல் ஒன்பது மணிநேர ஆழ்ந்த தூக்கம் தேவைப்படுகிறது.

 

புகையிலையிலிருந்து வரும் நிகோடின் இதயம் மற்றும் இரத்த தமனிகளை சேதப்படுத்துவதோடு, மூளையை அடையும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைத்து நினைவாற்றலைக் குறைக்கிறது.

பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link