இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோ! மிரட்டலாக உருவாகும் புதிய படம்!

Sat, 12 Oct 2024-10:55 am,

பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் திரைப்படமாக பிரசாந்த் வர்மா எழுதி இயக்கிய ஹனுமான் பான் இந்தியா பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது. இந்நிலையில் PVCU3 சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ 3வது திரைப்படத்தை அறிவித்துள்ளார். 

 

RKD Studios சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் இப்படத்தை தயாரிக்க, RK துக்கல் வழங்குகிறார். RKD Studios இந்தியாவின் முன்னணி மோஷன் பிக்சர் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கையகப்படுத்தும் நிறுவனமாகும், இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பில் களமிறங்குகிறது. 

 

கதை மற்றும் திரைக்கதையை பிரசாந்த் வர்மா எழுத, பெண் இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லுரு இப்படத்தை இயக்குகிறார். ஆன்மீகம் மற்றும் புராணங்களை சமகால சிக்கல்களுடன் கலந்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

 

இது இந்தியாவில் இருந்து வரும் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் மற்றும் இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் அசத்தலான சூப்பர் ஹீரோவாகும். இப்படத்திற்கு வங்காளத்தின் வளமான கலாச்சார பின்னணியில் அமைக்கப்பட்ட "மஹாகாளி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

இதன் அறிவிப்பு போஸ்டரில் ஒரு பெண், புலியின் தலையை மெதுவாகத் தொடும் காட்சி இடம்பெற்றுள்ளது. பின்புலத்தில் குடிசைகளும் கடைகளும் தெரிகின்றன, மக்கள் பீதியில் ஓடுகிறார்கள். ஒட்டுமொத்தமாக, அந்த பிரம்மாண்டத்தில், போஸ்டர் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது.  

 

இப்படத்தில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இணைந்து பணியாற்றுகிறார்கள். ஸ்மரன் சாய் இசையமைக்க, ஸ்ரீ நாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். படத்தின் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் பின்னர் வெளியிடப்பட உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link