கொழுப்பை எரித்து... தொப்பையை கரைக்க.... சாப்பிடும் முன் குடிக்க வேண்டிய சூப்பர் ட்ரிங்க்
இன்றைய நவீன வாழ்க்கை முறை, மற்றும் உணவுப் பழக்கம் நமக்கு கொடுத்த பரிசுகளில் ஒன்று உடல் பருமன். உடல் எடை அதிகமாக இருப்பது, ஒரு நோய் என்று கூற முடியாது. ஆனால் உடல் பருமன் நமது உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிவிடும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, நமது உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டும். அந்த வகையில், உணவிற்கு முன் சில பானங்களை அருந்துவது பெரிதும் பலன் கொடுக்கும். சில ஆரோக்கிய பானங்கள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தி கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டவை.
குடல் ஆரோக்கியம்: செரிமானம் சிறப்பாக இருந்து, குடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால், உடல் பருமனை குறைப்பது எளிது. இந்நிலையில், குடலை ஆரோக்கியமாக வைத்து, வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும் பானங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சீரக நீர்: சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த நீரை சாப்பிடும் முன் அருந்துவதால், உணவு நன்றாக செரிமானம் ஆகி, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்வது எளிதாகும். சீரகத்தை வறுத்து பொடி செய்து, அதில் வெந்நீர் கலந்த பானத்தையும் அருந்தலாம். இதனால், மெட்டபாலிஸம் அதிகரிக்கும்.
இஞ்சி எலுமிச்சை பானம்: உடல் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றொரு சிறந்த மசாலா இஞ்சி. இதய ஆரோக்கியம் முதல் நுரையீரல் ஆரோக்கியம் வரை பல வகைகளில் நன்மை தரக்கூடிய இஞ்சி எலுமிச்சை பானத்தை சாப்பிடும் முன் அருந்துவதால், உடல் கொழுப்பு சிறப்பாக கரையும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.
சோடா பானங்கள்: நம்மில் பலருக்கு, சாப்பிடும் போது, இனிப்பு அதிகம் சேர்த்த சோடா பானங்கள், அதிக சர்க்கரை கொண்ட செயற்கை பழ பானங்கள் ஆகியவற்றை அருந்தும் பழக்கம் உள்ளது. இதனை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இவை உங்கள் எடை இழப்பு முயற்சிகளை பாழாக்கி விடும்.
செயற்கை பானங்கள்: சர்க்கரை அதிகம் கலந்த செயற்கை பானங்கள் அருந்துவதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும் என்றாலும், இதில் ஊட்டச்சத்து என்பது எதுவும் இல்லை. அதோடு கலோரிகளும் மிகவும் அதிகம். இதனை அருந்துவதால் உடல் எடை மிகவும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது