பிரபலத்திற்கு விலை படுகொலை: கொல்லப்பட்ட அரசியல் தலைவர்கள்

Sat, 09 Jul 2022-4:14 pm,

இந்தியாவின் பிரதமர்களாக பதவி வகித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மாவும் மகனும் கொல்லப்பட்டது வரலாற்றின் வடுவாக தங்கிவிட்டது.

தாய், தனது பாதுகாவலரால் கொல்லப்பட்டால், மகன் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்தார்.

காங்கோ ஜனாதிபதி லாரன்ட் கபிலா, தனது மெய்க்காப்பாளர்களில் ஒருவரால் கொல்லப்பட்டார். ஜனவரி 18, 2001 அன்று, காங்கோ  தலைநகர் கின்ஷாசாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற படுக்கொலை சம்பவத்தில், அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் கொலையாளியாக மாறிய பாதுகாவலரை சுட்டுக் கொன்றனர். (Photograph:AFP)

ஜூன் 1, 2001 அன்று, நேபாளத்தின் பட்டத்து இளவரசர், தீபேந்திரா, அரண்மனையில் அவரது குடும்பத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் கொன்றார். மன்னர் பிரேந்திராவைக் கொன்றார். ராணி ஐஸ்வர்யா, இளவரசர் மற்றும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இளவரசனின் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். (Photograph:AFP)

 

பெல்கிரேடில், அரசாங்க கட்டிடத்தின் முன் செர்பிய பிரதமர் ஜோரன் டிஜின்ஜிக் சுட்டுக் கொல்லப்பட்டார். 2003ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி இந்த படுகொலை நடைபெற்றது. பிரதமரின் மேற்கத்திய சார்பு சீர்திருத்தங்களைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட கொலை தொடர்பாக செர்பிய நீதிமன்றம் 12 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. (Photograph:AFP)

பிப்ரவரி 14, 2005 அன்று, பெய்ரூட்டில் கடலுக்கு அருகில் உள்ள ஒரு பவுல்வர்டில் தற்கொலை ட்ரக் வெடிகுண்டு லெபனான் பிரதம மந்திரி ரஃபிக் ஹரிரியின் உயிரை எடுத்தது. அண்டை நாடான சிரியாவின் நாசவேலை என்று லெபனானில் பலர் நம்புகின்றனர். இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்த நிலையில் 226 பேர் காயமடைந்தனர்.

ஐ.நா ஆதரவு நீதிமன்றம் ஒன்று ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் இருவருக்கு இந்த படுகொலை தொடர்பாக சமீபத்தில் ஆயுள் தண்டனை விதித்தது. (Photograph:AFP)

டிசம்பர் 27, 2007 அன்று, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ஒரு அரசியல் நிகழ்வில் பெனாசிர் பூட்டோ மீது தற்கொலை குண்டுதாரி தாக்குதல் நடத்தினார். முஸ்லீம் பெரும்பான்மை தேசத்தின் முதல் பெண் தலைவர் ரான பெனாசீர் பூட்டோ படுகொலையால் இறந்தார். (Photograph:AFP)

நேட்டோ ஆதரவு கிளர்ச்சியில் தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து, நீண்டகால லிபிய சர்வாதிகாரி மொயம்மர் கடாபி அக்டோபர் 20, 2011 அன்று புரட்சியாளர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். (Photograph:AFP)

ஜூலை 7, 2021 அன்று, துப்பாக்கி ஏந்திய நபர்கள் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள ஹைட்டி அதிபர் குடும்பத்தின் வீட்டிற்குள் நுழைந்து, அதிபரை கொன்று அவரது மனைவி மார்டினுக்கு காயங்களை ஏற்படுத்தினார்கள்.   (Photograph:AFP)

ஏப்ரல் 20, 2021 அன்று, கிளர்ச்சியாளர்கள் சாட் ஜனாதிபதி இட்ரிஸ் டெபி இட்னோவைக் கொன்றனர். தனது ஆட்சியை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் தேர்தலில் வெற்றி பெற்ற சில மணி நேரங்களிலேயே இந்த படுகொலை நடைபெற்றது

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தற்க்கொலை குண்டுதாரியால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்

2022, ஜூலை 8ம் தேதியன்று ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானிய நகரமான நாராவில் ஒரு பிரச்சார நிகழ்வில் உரை நிகழ்த்தியபோது  சுடப்பட்டார். அவர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக பிறகு அறிவிக்கப்பட்டது.  (Photograph:AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link