ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.3 கோடி வாங்கும் பிரபல நடிகை!
)
பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்குள் சென்ற நடிகைகளுள் ஒருவர், பிரியங்கா சோப்ரா.
)
பிரியங்கா, விஜய்க்கு ஜோடியாக தமிழில், 2002ஆம் ஆண்டில் வெளியான தமிழன் படத்தில் நடித்திருந்தார்.
)
பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகரும் ஆங்கில பாடகருமான நிக் ஜோனஸை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நிக்-பிரியங்காவிற்கு மால்தி என்ற மகள் உள்ளார்.
வழக்கமாக, அனைத்து பிரபலங்களும் சமூக வலைதளம் மூலமாகவும் சம்பாதிப்பதுண்டு. ஏதாவது ஒரு பொருளுக்கு அல்லது பிராண்டிற்கு விளம்பர தூதுவராக இருப்பது, அதை தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதன் மூலம் ஒரு தொகையை சம்பாதிப்பது வழக்கம்.
பிரியங்கா சோப்ராவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய பிராண்டுகளை ப்ரமோட் செய்துள்ளார்.
இப்படி விளம்பரத்திற்காக இவர் பதிவிடும் போஸ்டுகள் பெரிதளவில் பேசப்படுவதுண்டு. பிரியங்கா, ஒரு போஸ்டிற்கு 3 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம்.