பிரகாசமான உடையில் பளிச்சிடும் பிரியங்கா மோகன்!
)
எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, தற்போது பல ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் பிரியங்கா மோகன் தான் டாப் லிஸ்டில் இருக்கிறார்.
)
இவர் 2019-ம் ஆண்டு வெளியான 'ஒன்த் கதே ஹெல்லா' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், அதன் பின்னர் அதே வருடம் நானியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். தற்போது இரண்டாவது முறையாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'டான்' என்கிற படத்திலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்' படத்திலும் நடித்து வருகிறார்.
)
திரைப்படங்கள் மட்டுமல்லாது, போட்டோஷூட் செய்து தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் இவர் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் இவர் மஞ்சள் நிற ஸ்லீவ்லஸ் உடை அணிந்துகொண்டு புன்னகை பூக்க பதிவிட்டிருக்கும் படத்துக்கு லைக்ஸுகள் அள்ளுகிறது.