சிம்மத்தில் செவ்வாய்! சமசப்தக யோகத்தினால் சங்கடத்தை சந்திக்க போகும் ‘சில’ ராசிகள்!

Wed, 21 Jun 2023-3:46 pm,

செவ்வாய்ப் பெயர்ச்சி 2023: செவ்வாய் கிரகம் ஜூலை 1 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையப் போகிறது. செவ்வாய் நெருப்பு கிரகம் மற்றும் சிம்மம் நெருப்புக்கான ராசியாகும். அப்படிப்பட்ட நிலையில் செவ்வாய் சிம்மத்தில் வந்த பிறகு உக்கிரமாக மாறிவிடுவார். அன்று சிம்மத்தில் செவ்வாய் நுழையும் போது சனியும் செவ்வாயும் நேரெதிராக பார்ப்பதால் சமசப்தக யோகம் உண்டாகும்.

சனி தற்போது கும்ப ராசியில் இருக்கும் சூழ்நிலையில், சனி செவ்வாய் நேருக்கு நேர் சந்திக்கும். இதனுடன், சனி வக்ர நிலையில் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் செவ்வாயுடன் சனி நேருக்கு நேர் இருப்பதால் உலகம் முழுவதுமே,  இயற்கை சீற்றங்களால்  பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலையில் உலக அளவில் பாதிப்பு அதிகம் இருக்கும்.

சனியும் செவ்வாயும் நேருக்கு நேர் ஏற்படும் சமசப்தக யோகம் பல ராசிக்காரர்களுக்கு கெடுதலான பலன்களைத் தரும். சனி செவ்வாயின் இந்த நிலையினால் உண்டாகியுள்ள சம்சப்த யோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதகமாக அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

சமசப்தக யோகத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்கள் இந்த நேரத்தில்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள், மேலும் காரமான உணவைத் தவிர்ப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக வாகனத்தை பயன்படுத்த வேண்டும். காதல் விவகாரங்களில் கூட, எச்சரிக்கையாக இருப்பது நல்லது,

சமசப்தக யோகத்தின் தாக்கத்தால் கடக ராசிக்காரர்கள் தங்கள் பேச்சைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் உங்கள் கவுரவம் பாதிக்கப்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனம் தேவை. உங்கள் உறவுகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தாயுடனான உங்கள் உறவும் பெரிதும் பாதிக்கப்படலாம். 

சமசப்தக யோகத்தின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் நிதி நிலையை கவனித்து பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில், மிகவும் கவனமாக ஒரு முடிவை எடுக்கவும். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்கள்,  இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு சில உடல்நல பிரச்சனைகளும் இருக்கலாம்.  உடல்நிலை குறித்து அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மனஅழுத்தம் உங்களை சிறப்ப்பக செயல்பட விடாமல் தடுக்கும்.

சமசப்தக யோகத்தின் தாக்கத்தால் மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் ஆடம்பரத்திற்காக நிறைய செலவு செய்ய உள்ளீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக வாகனத்தை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பாதிப்பு ஏற்படலாம். குடும்பத்திலும் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒருவரையொருவர் பற்றிய பற்றுதலும் அன்பும் குறைவாகவே காணப்படும்.

மீன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள், ஆனால் இதற்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த ராசி மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில், உங்கள் பெயர் கெட்டுப் போகும் வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்க போராட வேண்டி இருக்கும். செவ்வாய் தோஷத்தால் உங்களுக்குள் கர்வம் அதிகம் காணப்படும். இதன் காரணமாக வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் காணப்படும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link