கொழுப்பை எரிக்க உதவும்... புரதம் நிறைந்த சில சூப்பர் உணவுகள்!
புரத சத்து என்னும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும், புரதம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு, சீக்கிரம் பசி எடுக்காமல் இருக்கும்.
பருப்பு வகைகள்: சைவ உணவு உண்பவர்கள் புரத சத்தைப் பெற பீன்ஸ், உளுந்து உள்ளிட்ட புரதம் நிறைந்த பல்வேறு வகையான பருப்பு வகைகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக பட்டாணியில் அதிக அளவு புரதம் உள்ளது. அதிலும் தோல் நீக்காத பயறுகள் புரதத்தின் சுரங்கம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
உடலில் புரதச்சத்து குறைபாடு இருந்தால், சோயா பீன்ஸ் மற்றும் சோயாபீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு பன்னீர், சோயா பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் புரதச்சத்து ஏராளமாக உள்ளது.
காளான் புரதத்தின் சிறந்த மூலமாகும். இதில் தினசரி உடலுக்கு தேவையான அளவு புரோடீன் சத்து உள்ளது. காளானை பல்வேறு விதங்களில் சமைத்து சாப்பிடலாம். ஆனால், ஒருபோதும் காளானை சமைக்காமல் உண்ணக்கூடாது என்பதை கருத்தில் கொள்ளவும்.
பன்னீர்: பாலாடைக்கட்டி என்னும் பன்னீரில் அதிக புரதம் உள்ளதோடு, கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது என்பதால், உடல் எடையை குறைக்க சிறந்த உணவு. மேலும், இதில் கால்சியம், பாஸ்பரஸ், ரைபோஃப்ளேவின, வைட்டமின் பி12, உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
புரதம் என்றதும் நம்மில் பலருக்கு நினைவில் வருவது முட்டை தான். முட்டைகளில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை காலை உணவு மற்றும் சிற்றுண்டிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகின்றன. உடல் எடையை இழக்கவும் தசையை வலுப்படுத்தவும் முட்டை உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.