Punjab National Bank: 600 நாட்களுக்கான டெபாசிட்டில் 7.85% வட்டி விகிதம், விவரம் இதோ
பிஎன்பி தனது ட்வீட்டில், வாய்ப்பை நீங்கள் தவறவிட்டிருந்தால், 600 நாட்கள் FD திட்டத்திற்கு இப்போதே விண்ணப்பித்து 7.85% வட்டி விகிதத்தைப் பெறுங்கள். PNB One Mobile App, Internet Banking அல்லது வங்கிக் கிளைக்கு சென்று வாடிக்கையாளர்கள் 600 நாட்கள் FD திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறலாம் என கூறியுள்ளது.
PNB இன் இணையதளத்தின்படி, வங்கி, 600 நாட்களுக்கான FD-களுக்கு வெவ்வேறு வகைகளில் வட்டி செலுத்துகிறது. 600 நாட்கள் எஃப்டியில் 2 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டில் சாதாரண குடிமக்களுக்கு 7%, மூத்த குடிமக்களுக்கு 7.50% மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.85% வட்டி கிடைக்கும்.
PNB இன் 600 நாட்களுக்கான டொமஸ்டிக் நிலையான வைப்புத்தொகைக்கு (காலபிள்) 7% மற்றும் 600 நாட்கள் (நான் காலபிள்) 7.05% வட்டி கிடைக்கும். வங்கி தற்போது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.50% முதல் 6.10% வரையிலான வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சாதாரண குடிமக்களை விட மூத்த குடிமக்களுக்கு வங்கி 50 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.