ராசிபலன் 2023: வேலையில் வெற்றிகளை குவித்து அங்கீகாரத்தை பெறும் ‘5’ ராசிகள்!

Tue, 27 Dec 2022-11:19 pm,

மேஷம்- புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்கள் சூரியன், புதன், வியாழன் ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தால் வேலையில், தொழிலில் பெரிய பலன்களைப் பெறலாம்.  சிற்ந்த சம்பள பேகேஜுடன் புதிய வேலையைப் பெறுவதில் அவர்கள் வெற்றிபெற முடியும். 

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு பல விஷயங்களில் அற்புதமாக அமையப் போகிறது. இந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய நன்மைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், புதிய வேலையின் மூலம் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளும் திறக்கப்படும். குழந்தைகளாலும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

துலாம்- 2023 துலாம் ராசிக்காரர்களுக்கு வேலை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் நன்மை பயக்கும். வேலை தேடுபவர்களின் தேடல் முடிவடையும். உங்களுக்கு விருப்பமான வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உறவுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு பலன் தரும். இவர்களுக்கு வேலையில் பதவி உயர்வும், புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பெரிய பலன்களைப் பெறலாம்.

கும்பம்- 2023 ஆம் ஆண்டு கிரகப்பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும். பெரிய பேக்கேஜில் புதிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பெரிய ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்படும். கடின உழைப்புக்கு முழுப் பலன் கிடைத்து மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link