புத்தாண்டு ராசிபலன் 2025 : லட்சுமி தேவி ஆசிர்வாதம் கிடைக்க 4 வாஸ்து பரிகாரங்கள்..!

Sun, 22 Dec 2024-4:07 pm,

புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகிவிட்டார்கள். புத்தாண்டு ராசிபலன் (Puththandu Rasi Palan) தெரிந்து கொண்டு தங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். 

உங்கள்குடும்பத்தின் துக்கங்களும் துன்பங்களும் நீங்கி குடும்பத்தில் உள்ள அனைவரும் வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை நிச்சயம் உங்களுக்கு இருக்கும்.

ஒருவரின் வீட்டில் பணக்கஷ்டம் எல்லாம் நீங்கி மகிழ்ச்சி வர வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டும். லட்சுமி தேவியின் அருள் மட்டும் கிடைத்துவிட்டால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். 

அதற்கு முதலில் நீங்கள் மிகவும் பயனுள்ள வாஸ்து பரிகாரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வாஸ்து பரிகாரங்கள் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியை கொடுக்கும். 

2025 புத்தாண்டில் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்தில் நிலைத்திருக்க வேண்டுமெனில், அவருடைய ஸ்ரீ சூக்தம் பாராயணம் செய்ய வேண்டும். அதாவது லட்சுமி தேவிக்கு உகந்த மந்திரம். இந்த பாராயணம் செய்வதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, வீட்டில் பணவரவு இரட்டிப்பாகும் என்பது ஐதீகம்.

தானம் செய்வதும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதும் மிகவும் மங்களகரமான செயலாகக் கருதப்படுகிறது. புத்தாண்டில் தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப உணவு, உடைகள், பணம் மற்றும் பிற பொருட்களைக் கொடுத்து உங்கள் திறனுக்கு ஏற்ப உதவலாம். இப்படிச் செய்வது வேலையிலும், வியாபாரத்திலும் மிகவும் பலன் தரும்.

 

லட்சுமி தேவியை மகிழ்விக்க, தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து வழிபட வேண்டும். இதற்குப் பிறகு, சாந்தமான மனதுடன் வீட்டுக் கோயில் முன் அமர்ந்து காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். மேலும் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

 

எண் கணிதத்தின்படி, 2025 ஆம் ஆண்டின் மூல எண் 9 ஆகும், அதன் அதிபதி செவ்வாய் என்று கருதப்படுகிறது. அனுமன் செவ்வாய் கிரகத்தை ஆட்சி செய்கிறார். இந்த வழிபாடு செய்தால் அனுமன் அருள் அடுத்த ஆண்டு அனைவருக்கும் இருக்கும். அவரைப் பிரியப்படுத்த, நீங்கள் தவறாமல் கோயில் சென்று வணங்க வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link