பசியை அடக்க முடியல.. ஆனால் வெயிட் குறையணுமா? இதோ உங்களுக்கான `டயட் ஸ்னாக்ஸ்`
உடல் பருமன் என்பது இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதை சரி செய்ய மக்கள் பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
சில சுவையான சிற்றுண்டிகளை சாப்பிட்டும் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க உதவும் அப்படிப்படட் அட்டகாசமான சில ஸ்னாக்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மசாலா ஓட்ஸ் மிகவும் சுவையான மற்றும் பலருக்கு பிடித்தமான ஆரோக்கியமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையத் தொடங்கும் என்பது ஆச்சரியமான உண்மையாகும். சுவையான உணவுகளும் நம் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், முளைத்த கொண்டைக்கடலையில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாட் செய்து உட்கொள்ளலாம். இதில் ஏராளமான புரதச்சத்து கிடைக்கும். இது சுவையாக இருப்பதுடன், உங்கள் எடையைக் குறைக்கவும் உதவும்.
அவல் மிகவும் லேசான உணவாகும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால், தினமும் ஒரு வேளை வெறும் அவல் பண்டங்களை சாப்பிடலாம். இது சுவையாகவும், உடல் எடையை அதிகரிக்காமலும் இருக்கும். போஹாவில் சில காய்கறிகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உப்புமா செய்து சாப்பிடலாம். அல்லது பாலில் ஊற வைத்தும் உட்கொள்ளலாம்.
மாலை நேர சிற்றுண்டியில் காய்கறிகள் போட்ட உப்புமாவையும் சேர்த்துக்கொள்ளலாம். இது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது உண்பதற்கு மிகவும் இலகுவானது மற்றும் உங்கள் உடலை இலகுவாக வைத்திருக்கும்.
வறுத்த கொண்டைக்கடலை எடையைக் குறைப்பதில் பெரும் நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால், வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதோடு, அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கிறது.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.