நடிகர் தனுஷின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா?
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஃபிலிம் பேர் விருகள், தேசிய விருது என ஏராளமான விருதுகளை குவித்துள்ள தனுஷ், 'துள்ளுவதோ இளமை'படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுத்தார்.
அண்ணன் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்கள் இவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது.
அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் பல ஹிட் படங்களில் தனுஷ் நடித்துள்ளார். குறிப்பாக பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் இவருக்கு பல விருதுகளை தந்துள்ளது.
தற்போது தனுஷ் கோலிவுட், டோலிவுட், பாலிவுட்,ஹாலிவுட் வரை பிரகாசித்து வருகிறார். 2022ம் ஆண்டு ஹாலிவுட்டில் இவர் தி கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிப்பு, தயாரிப்பு,இயக்கம், பாடலாசிரியர், பாடலகர் என பல திறமைகளை கொண்ட தனுஷ், தனது 50வது படமான ராயன் படத்தை எழுதி, இயக்கி நடித்துள்ளார்.
இந்நிலையில், தனுஷ் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.
தற்போது அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவலை இங்கே காணலாம். அதன்படி தனுஷின் சொத்து மதிபபு ரூ.160 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் ஒரு படத்திற்கு அவர் சுமார் ரூ.50 கோடி சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது ராயன் படத்திற்கும் அவர் அந்த தொகையைத்தான் சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.