ராகுவின் அருளால் குபேர யோகம் பெறும் ‘சில’ ராசிகள்!
ராகு பெயர்ச்சி பலன் 2023: ஜோதிடத்தில் நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, அக்டோபர் 30, 2023 திங்கட்கிழமை மதியம் 1.33 மணிக்கு மீன ராசியில் நுழைகிறார். ராகு மீனத்தில் நுழைவதற்கு முன்பு மேஷ ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருப்பார். ராகுவின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகிறது. ராகு பெயர்ச்சி யாருக்கு சாதகமாக அமையும் என்று பார்ப்போம்.
மீனம்: ராகுவின் ராசி மாற்றத்தால் பணவரவு கூடும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம். நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கடனாகக் கொடுத்த பணத்தையும் திரும்பப் பெறலாம். தொழிலில் வெற்றி பெறலாம்.
கும்பம்: செல்வம் மற்றும் பேச்சுத்திறனுக்கான வீடு என்று அழைக்கப்படும் உங்கள் ராசியின் இரண்டாவது வீட்டிற்கு ராகுவின் சஞ்சாரம் இருக்கப் போகிறது. இதனால் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். பழைய முதலீடுகளில் மூலம் வருமானம் பெறலாம். கடனாகக் கொடுத்த பணத்தையும் திரும்பப் பெறலாம்.
கடகம்: ராகு சஞ்சாரத்தின் தாக்கத்தால் வியாபாரம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. தடைப்பட்ட வேலைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும்.
மிதுனம்: ராகு பெயர்ச்சியின் தாக்கத்தால் திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது. மதிப்பு மரியாதை கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. பதவியினால் கௌரவம் அதிகரிக்கும்.