வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல்காரர்களை சந்தித்த ராகுல்காந்தி
)
காங்கிரஸ் கட்சியை கட்டமைக்கும் வகையில், ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
)
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் மேற்கொள்ளும் இந்த பயணத்தில் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து உரையாட இருக்கிறார்.
)
3வது நாள் பயணத்தில் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல்காரர்களை சந்தித்து உரையாடினார் ராகுல்காந்தி.
நடைபயணத்தின்போது பள்ளி சிறுவர்களிடம் கைகுலுக்கி மகிழ்ந்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தங்கபாலு மற்றும் விஜய் வசந்த் ஆகியோர் உடனிருந்தனர்.