25 வயதில் இசையால் உலகை சுற்றி வரும் ரக்ஷிதா சுரேஷ்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அடையாளத்தைப் பெற்ற ரக்ஷிதா சுரேஷ், இப்போது தன்னுடைய திறமையால் தமிழின் முன்னணி பாடகியாக இருக்கிறார்.
இசைஞானி இளையராஜா இசையில் ஏற்கனவே பாடியிருக்கும் அவர், கன்னடத்தில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவிலும் வெற்றி வாகை சூடியிருக்கிறார்.
தமிழில் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியரில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இவரின் இசை திறமையை கண்டு இளம் வயதிலேயே சினிமா அரவணைத்துக் கொண்டது.
அதனால் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் பாடியுள்ளார் ரக்ஷிதா சுரேஷ்.
சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் இவர், எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கிருந்து சில புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு விடுவார். ரக்ஷிதாவுக்கு என்று ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது. இனிமையான குரலுக்காகவும், கலர்ஃபுல்லான புகைப்படங்களுக்காகவும்.