அரிய வகை Himalayan Serow இமாச்சல பிரதேசத்தின் ஸ்பிட்டியில், வைரலாகும் படங்கள்
அழிவின் விளிம்புநிலையில் உள்ள செரோ ரக ஆடுகள் இவை. அரிதாகவே காணப்படும் இமயமலை செரோ ஆடு, இமாச்சல பிரதேசத்தின் தொலைதூர ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் கண்டறியப்பட்டுள்ளது. மாநில வனவிலங்கு பிரிவு முதல் முறையாக ஒரு கேமராவில் இந்த செரோ ஆட்டை புகைப்படம் எடுத்துள்ளது. லஹெல்-ஸ்பிட்டி மாவட்டத்தின் ஸ்பிட்டி பள்ளத்தாக்கிலுள்ள ஹர்லிங் கிராமத்தில் இந்த அரிய வகை உயிரினம் கண்டறியப்பட்டுள்ளது.
மிகவும் கூச்ச சுபாவமுள்ள விலங்கு செரோ வகை இமயமலை ஆடு செரோ . இதனை குளிர்காலத்தில் மட்டுமே இது காண முடியும்
மிகவும் கூச்ச சுபாவமுள்ள விலங்கு இது என்றும், குளிர்காலத்தில் மட்டுமே இதை காண முடியும் என்றும் அதிகாரி ஒருவர் கூறுகிறார். குளிர்காலத்தில் மலையில் குறைந்த உயரத்திற்கு குடிபெயரும் போது இதனை பார்க்க முடியும். "இது மிகவும் கூச்ச சுபாவமுள்ள விலங்கு, அடர்த்தியான காடுகளில் தான் வசிக்கும்” என்று ஜிஹெச்என்பி துணை ரேஞ்சர் ரோஷன் லால் சவுத்ரி (GHNP Deputy Ranger Roshan Lal Chaudhary) கூறுகிறார்.
செரோ மிகவும் கவனமாக கண்காணிக்கப்படுகிறது. எந்தவொரு ஆபத்தும் ஏற்படாமல் இந்த அரிய வகை விலங்கைப் பாதுகாக்க அதிகாரிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகள் எடுத்த வீடியோவில், மேய்ந்து கொண்டிருந்த ஒரு நீரோடைக்கு அருகில் அரிய விலங்கு நகர்வதைக் காட்டுகிறது, இருப்பினும், மனிதர்களின் நடமாட்டத்தை உணர்ந்தவுடன் அது தப்பி ஓடியது.