Daily Rasipalan: ஜூன் மாதம் 13: க்ரோதி ஆண்டு வைகாசி 31ம் நாளுக்கான ராசி பலன்கள்!

Wed, 12 Jun 2024-11:19 pm,

வைகாசி மாதத்தின் 31ம் நாளான வியாழக்கிழமை நாள், குருவுக்கு உகந்த நாள். இன்று யாரின் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்?

சிக்கனமாக செயல்பட்டு சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் நாள். குலதெய்வ வழிபாடு அவசியம் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்

எதிர்பார்த்த சில பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால் கவனமாக பணியாற்றவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  

திட்டமிட்ட பணிகளை செய்து முடிக்கலாம். உத்தியோகத்தில் சீராக செயல்படுவதால், பாராட்டு வந்து குவியும். ஆனால் விழிப்புணர்வு வேண்டும். மறைமுகமான தடைகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்

தன்னம்பிக்கையுடன் இருந்தாலும் உறவினர்களின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும், இல்லையென்றால் அதை அகந்தை என்று பெயர் கட்டிவிடுவார்கள். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் மனதில் நிம்மதியையும், கவலைகளையும் கொடுக்கும், ஆன்மீகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும் 

 

அணுகுமுறைகயை மாற்றிக் கொண்டால், எதிர்பார்த்த செயல்களை நிறைவேற்றலாம். மனிதர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தனிப்பட்ட விஷயங்களை அனைவரிடமும் பகிர்வதை தவிர்க்கவும். உழைப்புக்கு உண்டான உயர்வு கிடைக்கும்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும், விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்துக் கொண்டு செயல்படவும்

தன்னம்பிக்கையும் கடவுள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.  முன்னேற்றத்திற்கான வழிகள் உங்கள் கண்முன்னால் வந்து நிற்கும், மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படும் அறிவை மற்றவர்கள் பாராட்டுவார்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான விஷயங்களை செய்வதில் காலதாமதம் ஆவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்

தான, தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் போக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தடங்கிவந்த காரியங்கள் சுலபமாக நிறைவேறும், புதிய அனுபவம் ஏற்படும்

மனதில் சஞ்சலங்கள் தோன்றி மறையும். நிர்வாகத்தில் ஏற்படும் மாற்றங்கள், உங்களுக்கு பாதகமாக மாறலாம். ஆனால் பதற்றமின்றி செயல்படவும். வியாபாரத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். வாய் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்

வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். சில காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். பரந்த மனப்பான்மை அவசியம் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். சோர்வு விலகும். சிக்கலான பணிகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்

மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழும் நாள் இது எதிர்பாராத செலவுகள் சுபமானதாக இருக்கும். அரசு விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். வேலையில் இருந்த சுணக்கம் குறையும், மனதில் மகிழ்ச்சி உருவாகும்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link