2029க்குள் UPI சேவைகளை 20 நாடுகளுக்கு விரிவாக்க ஆர்பிஐ திட்டம்!

Sun, 02 Jun 2024-5:48 pm,

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் ஆகியவற்றுடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தெரிவித்துள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் (என்ஐபிஎல்) ஆகியவை ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (யுபிஐ) 20 நாடுகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக ஏஎன்ஐ ஏஜென்சி தெரிவிக்கிறது  

 2029 நிதியாண்டுக்குள் அதாவது இன்னும் 5 ஆண்டுகளில் இந்த பணி முடிவடைந்துவிடும்

RBI ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த தகவல், UPI மற்றும் RuPay இரண்டின் உலகளாவிய இருப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.

விக்சித் பாரத் 2047க்கான இலக்குகளில் ஒரு பகுதியாக, ரிசர்வ் வங்கி, NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் உடன் இணைந்து இந்த இலக்கை 2028-29க்குள் முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவுடன் செயல்படவிருக்கிறது

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC) போன்ற நாடுகளின் குழுவுடன் விரைவான கட்டண முறை (FPS) ஒத்துழைப்பு மற்றும் பலதரப்பு இணைப்புகள் ஆராயப்படும்

ரிசர்வ் வங்கியின் பேமென்ட்ஸ் விஷன் ஆவணம் 2025, UPI மற்றும் RuPay கார்டுகளின் சர்வதேச விரிவாக்கத்தை ஒரு முக்கிய நோக்கமாக அடையாளம் கண்டுள்ளது. ரிசர்வ் வங்கி பல்வேறு மத்திய வங்கிகளுடன் கூட்டு ஏற்பாடுகளை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக ஆர்பிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

பொறுப்புத் துறப்பு:  இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link