விதிகளை மாற்றிய RBI, வங்கிகளுக்கு செக்: இனி இதற்கு அபராதம் கிடையாது.. கஸ்டமர்ஸ் ஹேப்பி

Wed, 22 May 2024-3:14 pm,

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப வசதிகள், ஆன்லைன் வங்கி சேவைகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு காரணமாக பண பரிவர்த்தனைகள், வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவை மிக சுலபமாகியுள்ளன.  இப்போது மக்கள் முந்தைய காலம் போல வங்கிகளில் வரிசைகளில் நிற்காமல் தங்கள் மொபைல் போன் மூலமாகவே அனைத்து பணிகளையும் செய்து விடுகிறார்கள். எனினும் இதில் சில சவால்களும் உள்ளன. 

வங்கிகளில் செய்யப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பான சில முக்கிய விதிகளை வங்கி வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக பல வங்கி கணக்குகள் உள்ளவர்கள் இவற்றில் கவனமாக இருக்க வேண்டும். 

பல வங்கி கணக்குகளை கொண்டுள்ள நபர்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை அனைத்து கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்புகளை பராமரிப்பதில் உள்ள சிரமம் ஆகும். குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கப்படாமல் இருந்தால், கணக்குகள் பெரும்பாலும் எதிர்மறை இருப்பு பகுதிக்குள் (Negative Balance Category) செல்கிறது. கடந்த காலங்களில் இப்படிப்பட்ட சூழலில் நெகடிவ் பேலன்சை கட்ட வேண்டி இருந்ததால், இது வாடிக்கையாளர்கள் மீதான நிதிச் சுமையை அதிகரித்தது. 

இந்த பிரச்சனையை தீர்க்கவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிகளின்படி, போதுமான நிதி இல்லாத கணக்குகளுக்கு வட்டி அல்லது அபராதம் விதிக்க வங்கிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வங்கி இருப்புகள் நெகடிவ்வில் செல்வது தடுக்கப்படுகின்றது. 

ஒரு கணக்கில் நெகடிவ் பேலன்ஸ் இருந்தாலும், வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் பணம் வசூலிப்பதை ஆர்பிஐ (RBI) சட்டப்பூர்வமாகத் தடுக்கிறது. முக்கியமாக, புதிய விதிமுறைகளின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை மூடும்போது நெகடிவ் பேலன்சை கட்ட வேண்டிய கட்டாயம் இல்லை.  

ஒரு கணக்கில் நெகடிவ் பேலன்ஸ் இருந்தாலும், வங்கிகள் கணக்கு வைத்திருப்பவரிடம் அந்த தொகையை கோருவது சட்டப்பூர்வமாகத் தடுக்கப்படுகிறது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படாமலும், எந்த வித அபராதங்களும் விதிக்கப்படாமலும், வங்கிக் கணக்குகளை மூட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையானது வங்கி வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதையும், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பது சவாலானதாக இருக்கும் சந்தர்ப்பங்களில் நியாயமான வழிமுறைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நெகடிவ் பேலன்ஸ் தொகையுடன் தொடர்புடைய நிதிச் சுமையை தகர்த்தி, புதிய விதிகள் பல வங்கிக் கணக்குகளுடன் போராடும் நபர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்குகின்றன.

ஒட்டுமொத்தமாக, வாடிக்கையாளர்கள் தேவையற்ற நிதி நெருக்கடி அல்லது அதிகார வற்புறுத்தல்கள் இல்லாமல் சேவைகளை அணுகக்கூடிய, மிகவும் வெளிப்படையான மற்றும் நுகர்வோர் நட்பு வங்கிச் சூழலை உருவாக்குவதில் RBI இன் உறுதிப்பாட்டை இந்த விதிமுறைகளின் அறிமுகம் பிரதிபலிக்கிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link