அன்லிமிடெட் காலிங் 2.5 ஜிபி டேட்டா! ஆனா, ஏர்டெல் ஜியோ வோடா மூணும் சார்ஜ் பண்றது வேற ரேட்ல! ஏன் தெரியுமா?

Tue, 24 Sep 2024-1:34 pm,

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் டெலிகாம் நிறுவனங்கள் அதிக இணையத்தைப் பயன்படுத்தும் பயனர்களைக் கருத்தில் கொண்டு பல ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 

தினமும் 2ஜிபி டேட்டாவுக்கு மேல் வழங்கப்படும் திட்டங்களில் அன்லிமிடெட் அழைப்பு வசதி உள்ளது

அத்துடன் டேட்டா ரோல்ஓவர், லைவ் டிவி மற்றும் கிளவுட் போன்ற சேவைகளும் மூன்று டெலிகாம் நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களில் வழங்கப்படுகின்றன. 

ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் அதிக இணையத்தைப் பயன்படுத்தும் பயனர்களுக்கானது. இந்த பேக்கில், தினமும் 100 எஸ்எம்எஸ் உடன் 2.5 ஜிபி டேட்டா  என மொத்தம் 70 ஜிபி டேட்டா கிடைக்கும். இதில் வரம்பற்ற அழைப்பு வசதி உள்ளது. இது தவிர, ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோ டிவி, கிளவுட் மற்றும் சினிமாவுக்கான அணுகல் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும்

டெலிகாம் நிறுவனமான ஏர்டெல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், 1 மாத கால அவகாசம் உள்ளது. ரூ 429 திட்டத்தில், தினமும் 2.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இதில், மற்ற நெட்வொர்க்குகளில் பேச அன்லிமிடெட் அழைப்பு வழங்கப்படுகிறது.  வரம்பற்ற 5G டேட்டா, ஹலோ ட்யூன் மற்றும் இலவச டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் நேரடி டிவி சேனல்களுக்கான அணுகல் என பல வசதிகளைக் கொண்ட இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை அதிகாரப்பூர்வ செயலி மற்றும் இணையதளத்தில் இருந்து ரீசார்ஜ் செய்யலாம்.

வோடபோன் ஐடியாவின் ரூ 409 திட்டம் ரீசார்ஜ் பேக்கில், தினமும் 2.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதில் வரம்பற்ற அழைப்பு வசதி உள்ளது. Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delights போன்ற சேவைகள் இந்த பேக்கில் வழங்கப்படுகின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் மட்டுமே.

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link