ரிலையன்ஸ்-டிஸ்னி டீல் ஓகே ஆனால் ஓடிடி இலவசமா கிடைக்குமா? குட்நியூஸ்
இந்தியாவில் OTT சந்தை வளர்ச்சியடைந்து வருகிறது, மேலும் அது மிகவும் போட்டி நிறைந்ததாகவும் உள்ளது. இந்த சந்தையில் முன்னணி நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாராகும். இந்த இரண்டு நிறுவனங்களும்இந்தியாவில் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளன.
இந்த இரண்டு நிறுவனங்களும் இணைக்கப்படும் என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த இணைப்பு நிறைவேறும்போது, இந்தியாவின் மிகப்பெரிய OTT தளத்தை உருவாகும். அதாவது அதிக யூசர்கள் கொண்ட ஓடிடி-ஆக இருக்கும்.
இந்த இணைப்பின் மூலம், பயனர்கள் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் முழு கன்டென்டுகளையும் அணுகலாம். இதில் இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடக்கம் ஆகியவை அடங்கும்.
ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இரண்டும் தங்கள் சொந்த படங்கள் மற்றும் வெப்சீரீஸ்களை வழங்குகின்றன. இரண்டு நிறுவனங்களும் இணையும்போது பயனர்கள் இந்த இரண்டு நிறுவனங்களின் படங்களையும் முன்கூட்டியே பார்க்கலாம்.
அதேநேரத்தில் மற்ற OTT நிறுவனங்களுக்கு இது சவாலாக இருக்கும். இந்த ஓடிடி தளத்துக்கு போட்டியாக அவர்கள் சந்தையில் இருப்பது என்பதும் கேள்விக்குறியாகும்.
ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டும் இணையும்பட்சத்தில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் உட்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் இந்த ஓடிடி தளத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய வாய்ப்பு இருக்கும்.
பிப்ரவரி இறுதிக்குள் இரண்டு நிறுவனங்களின் இணைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.