அமேசான் பிரைம் இலவச சந்தா உடன் 168GB டேட்டா ... அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ... வாடிக்கையாளர்கள் ஹாப்பி
மொபைல் ப்ரீபெய்ட் போஸ்பெய்ட் கட்டண உயர்வு: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், ஒரு மாத காலத்திற்கு முன்னால், கட்டண உயர்வை அறிவித்து, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தது.
கட்டண உயர்வினால் அதிருப்தி அடைந்த பல வாடிக்கையாளர்கள், பிஎஸ்என்எல் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி வரும் நிலையில், மீண்டும் ஜியோ, கவர்ச்சியான திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு கட்டண வரம்புகளில் வரும் பல வகையான திட்டங்களை கொண்டுள்ளது. இதில் டேட்டா, அன்லிமிடெட் காலிங், ஓடிடி நன்மைகள் என பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப எந்த விதமான திட்டத்தையும் தேர்வு செய்யலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற நினைக்கும் வாடிக்கையாளர் மனதை மாற்ற, ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக பல கவர்ச்சிகரமான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் ரூ.1029 திட்டமும் ஒன்றாகும்.
ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நல்ல திட்டம். டேட்டா, அழைப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்து வகையிலும் சிறப்பான திட்டமாக இருக்கும்.
அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷனுக்கான இலவச சந்தாவுடன் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம். இதன் மூலம் நீங்கள் மொபைலில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் அல்லது வெப் தொடர்களை ரசித்து பார்க்கலாம்.
ஜியோவின் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டம், பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதாவது பயனர்கள் மொத்தம் 168 ஜிபி டேட்டா பெறுவார்கள். வரம்பற்ற அழைப்பு மூலம், எந்த நெட்வொர்க்கிலும் எத்தனை அழைப்புகளை வேண்டுமானாலும் செய்யலாம். இது தவிர, பயனர்கள் தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும்.
ஜியோ 5G நெட்வொர்க்: அமேசான் பிரைம் வீடியோவுடன், பயனர்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கும் இலவச அணுகலைப் பெறுகிறார்கள். இது தவிர, நீங்கள் 5G ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால், உங்கள் பகுதியில் 5G நெட்வொர்க் இருந்தால், அதிவேக இணையத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.