Jio Outage : முடங்கிய ஜியோ... அதிர்ந்த வாடிக்கையாளர்கள்... என்னதான் ஆச்சு?
ரிலையன்ஸ் ஜியோவின் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் முடங்கியதாக புகார்கள் எழுந்தன.
ஏனெனில், பல பயனர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பவும் மற்றும் மற்றவர்களை அழைக்கவும் முடியவில்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Jio VoLTE சேவை கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டது. இதே பிரச்னைதான் Jio Fiber வசதியிலும் ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சனை இன்று காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை நாட்டின் பல இடங்களில் நீடித்துள்ளது. பின்னர், சேவைகள் அனைத்தும் கிடைப்பதாகவும், 3 மணிநேரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஜியோ அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
ஜியோ முடங்கியுள்ளதை அடுத்து, இணையத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை குவித்து வருகின்றனர்.